4 மாவட்டங்களில் 157 இடங்களில் வாகன பழுது நீக்கும் முகாம்கள் - முழு முகவரி உங்களுக்காக

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங் களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் பழுது நீக்கும் சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கியுள்ளது. அடையாறு ஆசிரியர் குடியிருப்பு ஜெய் பஜாஜ் நிறுவனத்தில் நடைபெற்ற பழுது நீக்கும் முகாமினை தொழில் மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் பி.தங்கமணி பார்வையிட்டார்.

Two-Wheeler Manufacturers Organise Free Service Camp

தமிழகத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால், சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர், கடலூர் மாவட் டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிகளுக் குள் வெள்ள நீர் புகுந்ததால், வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள், சொகுசு வாகனங்கள் உள்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சேதமடைந்தன.

இவற்றில், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்களை, யமஹா, பஜாஜ், டிவிஎஸ் மற்றும் ஐஷர் நிறுவனங்கள் இலவசமாக பழுது நீக்கி தருவதாகவும், இதற்கான சிறப்பு முகாம்கள் 12ம் தேதி முதல், வரும் 21ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

எங்கெங்கு முகாம் நடக்கிறது

இதன்படி, 4 மாவட்டங்களிலும், முகாம்கள் நடக்கும் இடங்கள், நடத்தும் நிறுவனங்கள் பட்டியலை தமிழக அரசு இணையதளத்தில் அறிவித்துள்ளது. இதன்படி பழுது நீக்கும் முகாம்கள் இன்று முதல் தொடங்கியுள்ளது.

ராயல் என்பீல்டு முகாம்

ராயல் என்பீல்டு நிறுவனத்தின், சென்னை, அண்ணாநகர் சதர்ன் மோட்டார்ஸ், ஆயிரம் விளக்கு பகுதியில் வேலவன் மோட்டார்ஸ், காஞ்சிபுரத்தில் ஜெட் பிளேஸ் மோட்டார்ஸ், கடலூரில் செல்லங்குப்பம் ரூஸ்டர் ஆட்டோமொபைல்ஸ் உள்ளிட்ட 13 முகவர்கள் சிறப்பு முகாமில் பங்கேற்கின்றனர்.

யமஹா நிறுவனங்கள்

யமஹா இந்தியா நிறுவனத்தின், சென்னை நங்கநல்லூர் பைக்கர்ஸ், அண்ணாசாலை பாரஸ் யமஹா, ஜாபர்கான்பேட்டையில் உள்ள மோட்டார்ஸ், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை ஆனந்த் யமஹா, திருவள்ளூர் மணவாளன் நகர் சம்பத்ராஜ் மோட்டார்ஸ், கடலூர், இம்பீரியல் சாலையில் உள்ள விஎம்எஸ் பைக்ஸ் உள்ளிட்ட 14 முகவர்கள் முகாம் நடத்துகின்றனர்.

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம்

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில், சென்னை அடையாறு ராம்கே மோட்டார்ஸ், தாம்பரம் சத்யா மோட்டார்ஸ், புது வண்ணாரப்பேட்டை வாரி மோட்டார்ஸ், அண்ணா நகர் கிழக்கில் குட்வில் ஆட்டோ மோட்டிவ், திருவள்ளூரில் ராகவா மோட்டார்ஸ், காஞ்சிபுரம் சாரதா மோட்டார்ஸ், கடலூர் மாவட்டம் வடலூரில் செம்பை ஏஜென்சீஸ், பண்ருட்டி திருவத்திகையில் உள்ள ஜெய்சக்தி டிவிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 90 முகவர்கள் முகாம் நடத்துகின்றனர்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சார்பில், சென்னை, திருவான்மியூரில் உள்ள அரோகி ஆட்டோ சர்வீஸ், ரெட்டேரி ஜே.கே.ஏஜென்சீஸ், திருவொற்றியூர் ஜெயம் ஆட்டோ கேர், ஆழ்வார் திருநகர் வினெக்ஸ் ஆட்டோமொபைல்ஸ், திருநின்றவூர் ஏபிஎஸ் மோட்டார்ஸ், முகப்பேர் மேற்கு எஸ்.வி.எஸ். ஆட்டோமொபைல்ஸ் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை விஎம்ஸ் மோட்டார்ஸ் உட்பட 34 முகவர்கள் முகாம் அமைத்துள்ளனர். அடையாறு நடைபெற்ற முகாமினை அமைச்சர் தங்கமணி பார்வையிட்டார்.

அட்டோக்களுக்கு பழுது நீக்க

ஆட்டோக்களுக்கு டிவிஎஸ் நிறுவனம் சார்பில், ஈக்காட்டுத்தாங்கல் சாய் ஆட்டோமொபைல்ஸ், பம்மல் சாய் சக்தி ஆட்டோ, சிந்தாதிரிப் பேட்டை சாய் ஹரி மோட்டார்ஸ், எருக்கஞ்சேரி எஸ்.பி.எம். மோட்டார்ஸ், ஆவடி மக்கா மோட்டார்ஸ், காஞ்சிபுரம் சபரி ஆட்டோமொபைல்ஸ் ஆகிய 6 இடங்களிலும் முகாம்கள் நடத்தப்படுகின்றன.முகாம் நடக்கும் இடங்கள், நடத்தும் முகவர்கள், அதில் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களின் கைபேசி எண் ஆகியவை அரசு இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளன.

ஜனவரி 31 வரை இலவசம்

இந்நிலையில், யமஹா இந்தியா நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியுள்ள எஸ் எம்.எஸ் தகவலில், வாகனங்களை ஜனவரி 31ம் தேதி வரை பணிக்கட்டணம் இன்றி இலவசமாக பழுது பார்த்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+