அனுமதி பெறாமல் காப்பகம் நடத்தினால் 2 ஆண்டு சிறை ரூ. 50 ஆயிரம் அபராதம்: சட்டசபையில் மசோதா தாக்கல்
சென்னை: அனுமதி பெறாமல் காப்பகம் நடத்தினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதற்கான மசோதா இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காப்பகத்தில் தங்கி இருந்த இரண்டு சிறுமிகளை, காப்பகத்தின் உள்ளே புகுந்து தூக்கிச் சென்று கயவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தார்கள். இதனைத் தொடர்ந்து அனுமதி இல்லாமல், சட்ட விரோதமாக நடத்தப்பட்ட காப்பகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டது.
அதன் தொடர்ச்சியாக விடுதிகளில் தங்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கவும், விடுதி மற்றும் காப்பகங்களை ஒழுங்குப்படுத்துவதற்காகவும் சட்டசபையில் இன்று அமைச்சர் வளர்மதி ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார்.
அந்த சட்ட மசோதாவில் கூறியிருப்பதாவது:-
பாதுகாப்பு...
பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாத்து அவர்களது நலனுக்காக அரசு முழு பொறுப்பேற்று பாதுகாப்பு அளிக்க முக்கியத்துவம் அளிக்கிறது.
வழக்கமான விடுதிகள்...
வீட்டில் இருந்து தொலை தூரங்களில் வசிக்கும் பெண் குழந்தைகளும், வளர்பருவ சிறுமிகளும், பெண்களும் வழக்கமாக தங்கக்கூடிய குழந்தைகள் காப்பகங்கள், விடுதிகள் போன்றவற்றில் தங்கியுள்ளனர்.
ஒழுங்கு படுத்தும் நடவடிக்கை...
இத்தகைய தங்கும் விடுதிகளை பல்வேறு நிறுவனங்கள் மட்டுமின்றி தனிநபர்களும் நடத்துகின்றனர். இங்கு தங்கியிருக்கும் பெண்கள், குழந்தைகளை பாதுகாப் பது அரசின் கடமை என் பதால் தங்கும் விடுதி காப்பகங்கள் அதை நடத்தும் நிறுவனங்களை ஒழுங்குப் படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
2 ஆண்டுகள் சிறை...
இதன்படி காப்பகம், விடுதிகளை அனுமதியில்லாமல் யாரேனும் நடத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ரூ. 50 ஆயிரம் அபராதம்...
காப்பகங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் காப்பக உரிமையாளர், மேலாளர் மற்றும் அதன் பொறுப்பாளர்களுக்கு 2 வருட சிறைத்தண்டனை, ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
கூடுதல் தண்டனை...
2-ம் முறை குற்றமாக கருதப்பட்டால் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்' என இதுபோன்ற பல்வேறு விதிகள் அந்த சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications