உடன்குடி அனல் மின் நிலையத்துக்கு புதிய ஒப்பந்தப்புள்ளி: தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு!
சென்னை: உடன்குடியில் புதிய அனல் மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் புதிய அறிவிப்புக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக சதர்ன் சென்ட்ரல் சீன பவர் எனர்ஜி டிசைனிங் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு மின்சார உற்பத்தி, மின் பகிர்மானக் கழகம் ஒப்பந்தப் புள்ளி கோரி அறிவிப்பு வெளியிட்டது. இதில், எங்கள் நிறுவனம் பங்கேற்று, மிகக் குறைந்த தொகையில் ஒப்பந்தப் புள்ளி கோரியது.

ஆனால் எங்கள் நிறுவனம் கோரிய ஒப்பந்த ஆவணங்களில் குறைபாடு இருப்பதாகக் கூறி மின் பகிர்மானக் கழகம் நிராகரித்தது. ஆனால், இதே தொகையை குறிப்பிட்டு எங்கள் நிறுவனம் எண்ணூர் அனல் மின் நிலையத் திட்டத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரி விண்ணப்பித்தது. அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
எனவே உடன்குடி அனல் மின் நிலைய திட்டத்துக்கு புதிதாக ஒப்பந்தப் புள்ளி கோருவதற்கு மின் உற்பத்தி பகிர்மானக் கழகத்துக்குத் தடை விதிக்க வேண்டும். மீண்டும் எங்களுக்கு ஒப்பந்தம் வழங்க பகிர்மானக் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. புதிய ஒப்பந்தப் புள்ளி கோருவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications