விவேக்கிற்கு அஞ்சலி செலுத்த.. கொடைக்கானலில் இருந்து.. தனி விமானத்தில் பறந்து வந்த உதயநிதி ஸ்டாலின்
கொடைக்கானல்: நடிகர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்த கொடைக்கானலில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை விரைந்துள்ளார்.
Recommended Video
நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் மிகத்தீவிரமாக 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
இதேபோல ஸ்டாலின் மகனும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கொடைக்கானல் ஓய்வு
இந்த நிலையில், ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தார் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானலுக்கு சென்றிருந்தனர். சென்னையில் இருந்து, தனி விமானம் மூலம், நேற்று மதுரை சென்ற ஸ்டாலின், அங்கிருந்து காரில் மதியம், 2:30 மணிக்கு கொடைக்கானலிலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியான, தமரா ஓட்டலுக்கு சென்றார்.

குடும்பம்
ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், பேரன், பேத்திகள் உள்ளிட்டோர், பல கார்களில் கொடைக்கானலுக்கு சென்றனர். மொத்தம் எட்டு அறைகளில், அவர்கள் தங்கியுள்ளனர்.

குடும்பத்தோடு ஓய்வு
எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்தோடு தங்கியிருப்பதால், கொடைக்கானல் டி.எஸ்.பி., ஆத்மநாதன் தலைமையில், ஹோட்டலை சுற்றிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவர்களை சந்திக்க, யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. கொடைக்கானல் குளுமையை ரசித்தபடி, அரசியல் நிலவரம் பற்றியும் ஆலோசிப்பதாக கூறப்பட்டது.

உதயநிதி சென்னை திரும்பினார்
இந்த நிலையில், நாளை ஸ்டாலின் குடும்பத்தினர் சென்னை திரும்புகின்றனர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடிகர் விவேக் இன்று காலை மாரடைப்பால் காலமானதால், உதயநிதி ஸ்டாலின் தனது பயணத்தை முன்கூட்டியே முடித்துக் கொண்டு, தனி விமானத்தில் சென்னை விரைந்தார். விமான நிலையத்திலிருந்து கார் மூலமாக விரைந்து சென்று, அவர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications