ஆமாம், வரிசையில்தான் நிற்கிறேன்.. தலைமை பொறுப்பை ஏற்க அல்ல.. உதயநிதி பேச்சு
தலைமை பொறுக்க ஏற்க நான் அரசியலுக்கு வரவில்லை என உதயநிதி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஆமாம்.. நான் வரிசையில்தான் நிற்கிறேன்.. ஆனால் திமுகவில் தலைமை பொறுப்பை ஏற்க அரசியலுக்கு தாம் வரவில்லை என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் சேலத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் நடப்பது குடும்ப ஆட்சி என்றும் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி இப்போதே லைனுக்கு வந்துவிட்டார். திமுக என்பது கட்சி இல்லை, அது ஒரு கம்பெனி" என்று விமர்சித்திருந்தார்.

முதுகெலும்பில்லாத அடிமைகள்
முதலமைச்சரின் இந்த விமர்சனத்திற்கு மறுநாளே உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்தார். அதில் "சுயமரியாதை இழந்த அடிவருடிகளுக்கும், முதுகெலும்பில்லாத அடிமைகளுக்கும் எங்கள் இயக்கத்தை பற்றி பேச துளிகூட தகுதி இல்லை" என்று காட்டமாகவே உதயநிதி தெரிவித்திருந்தார்.

திமுக கண்டன கூட்டம்
இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பணப்பட்டி கிராமத்தில் அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உதயநிதி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போதும், முதலமைச்சர் அன்று பேசிய "திமுகவின் அரசியல் வாரிசு" என்ற பேச்சிற்கு மீண்டும் பதிலளித்தார். உதயநிதி கூட்டத்தில் பேசியதாவது:

சிறைக்கு போவார்கள்
"தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. எல்லா அமைச்சர்களுமே ஊழல் புரிகின்றனர். இவர்கள் விரைவில் சிறைக்கு போவார்கள். அதனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரும்.

வரிசையில்தான் நிற்கிறேன்
என்னை திமுகவின் அரசியல் வாரிசு என்கிறார்கள். ஸ்டாலினுக்கு பின்னாடி அவரது மகன் உதயநிதி வரிசையில் நிற்கிறேன் என்றும் சொல்கிறார்கள். ஆமாம்... நான் வரிசையில்தான் நிற்கிறேன்.

தோள் கொடுப்பேன்
ஆனால் கட்சியில் தலைமை பதவிக்கு செல்ல மாட்டேன். தலைமை பதவி என்றில்லை, எந்த உயர்ந்த பதவிக்குமே செல்ல மாட்டேன். எப்போதும் திமுகவின் தீவிர தொண்டனாக மட்டுமே இருந்து கடைசி தொண்டனுக்கும் தோள் கொடுக்கவே அரசியலுக்கு வந்துள்ளேன்" என்றார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications