வா ஜாலியாக இருக்கலாம்... கூப்பிட்ட ஏழுமலை.. உளுந்தூர்பேட்டையில் ஓடிப்போன இளம் பெண்! நேர்ந்த பயங்கரம்
கள்ளக்குறிச்சி: விவசாய கூலி வேலைக்கு போன இடத்தில் ஏற்பட்ட கள்ளக்காதல் கடைசியில் கொலையில் முடிந்துள்ளது. வா ஜாலியாக இருக்கலாம் என கூப்பிட்டு சென்று, அங்கு ஜோடியாக விஷம் குடிச்சு செத்துப்போவோம் என்று மூளைச்சலவை செய்து, இளம் பெண்ணுக்கு விஷம் கொடுத்து கொலை செய்தவரை உளுந்தூர்பேட்டை போலீசார் கைது செய்தனர்-
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். கூலித் தொழிலாளியான இவர் விவசாய பணிகளுக்கு சென்று வருகிறார். இவரது மனைவி லதா வயது 30. இவர் விவசாய பணிகளுக்கு குழுவாக கூலியாட்களை அழைத்து செல்லும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
லதா, அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை (வயது 47) என்பவரது நிலத்திற்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கூலி வேலைக்காக வழக்கமாக ஆட்களை அழைத்து சென்று வந்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது'. இதை அறிந்த சிலர் லதாவின் கணவர் வேல்முருகனிடம் கூறியிருக்கிறார்கள். வேல்முருகன் அவ்வப்போது மனைவி லதாவை கண்டித்து வந்துள்ளார்.

மாயமான மனைவி
இந்நிலையில் கடந்த 27-ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு தனது குடும்பத்தினருடன் உணவருந்தி விட்டு வேல்முருகன் தனது வீட்டின் மாடிக்கு தூங்க சென்றுவிட்டார். அப்போது வீட்டை விட்டு வெளியே சென்ற லதா இரவு 12 மணி வரை வீடு திரும்பாததால் வேல்முருகன் பல்வேறு இடங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தேடி வந்துள்ளார்.

மருத்துவமனையில் பலி
இந்நிலையில் 28 - ஆம் தேதி இரவு லதாவின் வாயில் நுரை தள்ளியவாறு ஏழுமலை இரு சக்கர வாகனத்தில் அழைத்து செல்வதாக சிலர் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து வேல்முருகன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தேடி சென்றிருக்கிறார். விஷ மருந்திய நிலையில் லதாவை அழைத்து சென்ற ஏழுமலை லதா இறந்து விட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு ஏழுமலை தப்பியோடிவிட்டார்.

தனிப்படை போலீசார்
இதனிடையே அங்கு வந்த வேல்முருகனிடம் மருத்துவமனை ஊழியர்கள் இந்த தகவலை கூறியதையடுத்து வேல் முருகன் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் ஏழுமலை மீது நடந்த சம்பவங்களை கூறி புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவான ஏழுமலையை கண்டுபிடித்து கைது செய்தனர்.

தீர்த்துக்கட்ட முடிவு
அப்போது ஏழுமலையிடம் விசாரணை மேற்கொண்டதில் சில தகவல்களை கூறினார். அவர் கூறுகையில் எனக்கும் லதாவுக்கும் கடந்த 5 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்தது. அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். எனது மனைவிக்கு இது குறித்து தெரிந்ததால் தனது குடும்பத்திலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இருவர் குடும்பத்திலும் பிரச்சினை ஏற்பட்டதால் லதாவை தீர்த்து கட்டி விட வேண்டும் என திட்டமிட்டேன். நான் லதாவை இருவரும் வெளியே சென்று உல்லாசமாக இருக்கலாம் என அழைத்து வந்தேன். நாள் முழுவதும் அந்த பகுதியை சுற்றியுள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக சுற்றினோம்.

ஊற்றி கொடுத்தேன்
மறுநாள் 28. ஆம் தேதி இரவு ஊரின் ஏரிக்கரைக்கு சென்று உல்லாசமாக இருந்தோம். இதனை தொடர்ந்து நான் வாங்கி வந்திருந்த மதுவை குடித்துவிட்டு லதாவிடம் இருவர் குடும்பத்திலும் பிரச்சினை ஏற்படுவதால் நாம் நிம்மதியில்லாமல் வாழ்வதை விட ஒன்றாக சேர்ந்து விஷமருந்தி செத்து விடலாம் என மூளைச்சலவை செய்தேன். திட்டமிட்டு வாங்கி வந்த விஷ மருந்து பாட்டிலை எடுத்து லதாவிற்கு ஊற்றி கொடுத்தேன்.. இருவரும் குடித்து விடலாம் எனர் கூறி, நான் குடிப்பது போல் பாவனை செய்தேன். அந்த நேரத்தில் லதா மருந்தை குடித்து முடித்தார்.

இறந்து போனார் லதா
இதனையடுத்து சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த லதாவை பார்த்து பயந்து போன நான் அவரை இரு சக்கர வாகனத்தில் தூக்கி சென்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க முற்பட்டேன். மருத்துவமனை ஊழியர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதால்.. நான் தலைமறைவாகி விட்டேன்" இவ்வாறு ஏழுமலை கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து ஏழுமலையை கைது செய்த போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications