நீலகிரியில் தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து : மூன்று தொழிலாளர்கள் படுகாயம்
நீலகிரியில் தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.
குன்னூர் : நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று ஊழியர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கரன்ஸி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் . இவர் அந்த பகுதியில் தைலம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல அந்த தொழிற்சாலையில் உரிமையாளர் கனகராஜ் மற்றும் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பிரகாஷ், வேலு, ரஞ்சித் ஆகியோர் தைலம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது தைல தயாரிப்பிற்காக தொழிற்சாலையின் அருகே குவித்து வைக்கப்பட்டு இருந்த காய்ந்த தைல மர இலைகளில் திடீரென தீ பிடித்தது. காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென தொழிற்சாலைக்குள் பரவியது.

தீ வேகமாக பரவுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் பிரகாஷ், வேலு, ரஞ்சித் ஆகியோர் தீயில் இருந்து தப்பி வெளியே ஓடினர். அப்போது தீயில் சிக்கி அவர்கள் படுகாயம் அடைந்தனர். சிறிது நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் எரிந்து நாசமானது.

இந்த விபத்தில் தொழிற்சாலையின் கிடங்கில் தயாரித்து வைக்கப்பட்டு இருந்த நீலகிரி தைலம், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த தேயிலை தூள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 2 கார்கள் என மொத்தம் ரூ. 6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
தீ விபத்தில் காயம் அடைந்த பிரகாஷ், வேலு, ரஞ்சித் ஆகியோரை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மீட்டு குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications