Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரண்டாவது கணவருடன் சேர்ந்து 3வது கணவரின் குழந்தையை.. தென்காசி கண்ணனுடன் சேர்ந்து.. இவரும் ஒரு தாய்?

Subscribe to Oneindia Tamil

தென்காசி: மதுரை மாவட்டம் சொரிக்காம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்த இளம் தம்பதி தொடர்பான ஒரு கொடூரமான சம்பவம், ஒட்டுமொத்த தமிழகம், கேரளா மக்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி வருகிறது. இதுதொடர்பான விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். என்றாலும் இந்த அதிர்ச்சி இருமாநிலத்தில் இருந்தும் இன்னும் விலகவில்லை. அப்படி என்னதான் நடந்தது?

தென்காசி பகவதிபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு 25 வயதாகிறது.. அதேபோல கேரள மாநிலம் புனலூரைச் சேர்ந்த கலாசூர்யா என்பவருக்கும் 25 வயதாகிறது..

Tenkasi Husband Wife

தென்காசி கண்ணன்

இவர்கள் 2 பேருமே மதுரை மாவட்டம் சொரிக்காம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்தனர்.. அப்போது வேலை செய்யும் இடத்திலேயே இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கம் காதலாக மாறியது.. 2 மாதங்களுக்கு முன்பு காதலர்கள் திருமணமும் செய்து கொண்டனர்.

ஆனால் இதில் ஹைலைட் என்னவென்றால், இந்த கல்யாணத்துக்கு முன்பே கலாசூர்யாவுக்கு 2 திருமணங்கள் முடிந்திருந்தன... 2வது கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.. இதில் கலாசூர்யாவுக்கு ஷிவானி என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளது..

இரண்டாவது கணவரின் குழந்தை

இந்த குழந்தை இருப்பது தெரிந்தும்தான் கண்ணன், கலாசூர்யாவுடன் நெருங்கி பழகினார், காதலை சொன்னார், கல்யாணமும் செய்து கொண்டார்.. எனினும், குழந்தை இருப்பது கண்ணனுக்கு உறுத்தலாகவே இருந்தது..

"இந்த குழந்தை எனக்கு தொந்தரவாக இருக்கிறது" என்று கலாசூர்யாவிடம் அடிக்கடி சொல்லி வந்தாராம்.. இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த மாதம் 5-ந் தேதி, கலாசூர்யா பக்கத்திலுள்ள கடைக்கு போயிருக்கிறார்.. அந்த நேரத்தில் வீட்டில் இருந்த கண்ணன், 2 வயது குழந்தையான ஷிவானியின் கழுத்தை நெரித்தே கொன்றுள்ளார்.. கடைக்கு போன கலாசூர்யா, சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பி வந்ததுமே குழந்தையின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்...


குழந்தை எங்கே

ஆனாலும் 3வது கணவனை காப்பாற்ற, குழந்தையின் சடலத்தை மறைக்க விரும்பினார்.. தம்பதி இருவரும் சேர்ந்து குழந்தையின் உடலை ஒரு மூட்டையில் கட்டி, பண்ணைக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியிலுள்ள புதரில் வீசிவிட்டு வந்துள்ளனர்.

இதற்கு பிறகும்கூட, கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்த கலாசூர்யா, கேரளாவில் உள்ள தன்னுடைய அம்மா சந்தியாவின் வீட்டிற்கு கிளம்பி சென்றுவிட்டார். அங்கே போனதுமே, "குழந்தை எங்கே?" என்று சந்தியா மகளிடம் கேட்டுள்ளார்.. இதற்கு கலாசூர்யா தெளிவான பதில் சொல்லவில்லையாம்.. இதனால் சந்தேகம் அதிகரித்த சந்தியா, உடனே புனலூர் போலீசில் புகார் தந்துள்ளார்..

அழுகிய எலும்புகள்

இதையடுத்து கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்து, செக்கானூரணி போலீசாரின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தினார்கள்..

போலீசார் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்தது தெரிந்ததுமே, நேற்று கரடிக்கல் விஏஓ அன்பழகன் முன்னிலையில் கண்ணன் சரணடைந்தார். பிறகு அவர் செக்கானூரணி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், குழந்தையை கொன்று புதரில் வீசியதை கண்ணன் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கண்ணன் மற்றும் கலாசூர்யா இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆனால், குழந்தையை கொன்று 1 மாதம் ஆகிவிட்டதால், போலீசார் காட்டுப்பகுதிக்கு சென்று தேடியபோது, குழந்தையின் உடல் முழுவதும் அழுகி, எலும்புகள் மட்டுமே மீட்கப்பட்டன. அந்த எலும்புகளை போலீசார் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இப்போது தம்பதி இருவரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிர்ச்சியில் பொதுமக்கள்

இரண்டு வயது பிஞ்சு குழந்தைக்கு நடந்த இந்த கொடூர கொலை சம்பவம், பொதுமக்கள் மத்தியில் பெரும் வேதனையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மனசாட்சியே இல்லாமல் பச்சிளம் குழந்தைகள் இப்படி காவு வாங்கப்பட்டு வருவது, எந்த ரூபத்திலும் மக்களால் ஏற்க முடிவதில்லை.. அதேபோல இந்த கள்ளக்காதல் அட்டகாசங்கள் என்றுதான் அடங்குமோ? தெரியவில்லை..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+