ஜெயலலிதாவுக்கு வரிசை கட்டி வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர்கள்! ரஜினியும் வாழ்த்து!!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்தும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. 18 ஆண்டுகாலம் நீடித்த இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதாவை நேற்று விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், அருண்ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
ஆளுநர் ரோசையா, நடிகர் ரஜினி வாழ்த்து
இதேபோல் தமிழக ஆளுநர் ரோசையாவும் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும் நடிகர் ரஜினிகாந்தும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications