10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு மொத்தமும் போச்சு – சினிமா பாணியில் சென்னையில் 3 லட்சம் திருட்டு
சென்னை: சென்னையில் 10 ரூபாய் நோட்டைக் கீழே தவற விட்டு சினிமா ஸ்டைலில் 3 லட்ச ரூபாயைக் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிண்டியைச் சேர்ந்தவர் முருகானந்தம் தொழில் அதிபர். இவரது கார் டிரைவர் தேவராஜ். நேற்று அண்ணாசாலையில் உள்ள ஹோட்டலில் அவர் சாப்பிடச் சென்றுள்ளார்.
டிரைவர் தேவராஜ் மட்டும் காரினுள் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் காரின் கீழே ஏற்கனவே தான் தவறவிட்ட 10 ரூபாய்த்தாள்களை காட்டி தேவராஜிடம் கூறியுள்ளார். முருகானந்தம்தான் தவற விட்டிருப்பார் என்று எடுத்துக் கொண்டு அவரிடம் சென்றுள்ளார்.
இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் காரில் இருந்த பை, மொபைல் மற்றும் விமான டிக்கெட் ஒன்றையும் திருடிச் சென்றுள்ளார். அப்பையில் கிட்டதட்ட 3 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் இருந்துள்ளது.
இச்சம்பவம் பற்றி திருவல்லிக்கேணி போலீசில் புகார் செய்யப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட பை மட்டும் ராயப்பேட்டை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நூதனமான திருட்டு குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications