பாஜக தலைவர் தமிழிசை வீட்டின் முன்பு பட்டாசு ஓசை.. கொளுத்தியது யார்.. தேடும் போலீஸ்!
சென்னை: தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் வீட்டின் முன்னால் பட்டாசுகளைக் கொளுத்தி விட்டுச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விருகம்பாக்கத்தில் உள்ள லோகையா காலனியில் வசித்து வருகிறார். நேற்று மதியம் 2 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் தமிழிசை சவுந்தரராஜன் வீட்டின் முன்பு பட்டாசுகளை கொளுத்தி விட்டு சென்றுவிட்டனர்.

பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். ஆனால் அங்கு யாரும் இல்லை. இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு கிடந்த 129 ஆவது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் செந்தில்பாண்டியின் விசிட்டிங்கார்டில் உள்ள செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டனர்.
அவர் ஸ்ரீரங்கத்தில் இருப்பதாகவும், இதில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள்.
அனேகமாக ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் யாராவது வந்து பட்டாசு போட்டு விட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. நேற்றுதான் டெல்லியில் வாக்கு எண்ணிக்கை நடந்து, அதில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று, பாஜக படுதோல்வியைச் சந்தித்தது என்பது நினைவிருக்கலாம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications