பழைய பாசம் பேராண்டி: வாகை முத்தழகனின் மஞ்சள் துண்டு ரகசியம்
நெல்லை: மதிமுக தலைமைக் கழக பேச்சாளர் வாகை முத்தழகன் கட்சி பொதுக் கூட்டங்களில் மஞ்சள்
துண்டோடு காணப்படுகின்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நெல்லை சங்கீத
சபாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில பேச்சாளர் வாகை முத்தழகன் பேசுகையில்,
சட்டசபைத் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு காரணம், கட்சித் தொண்டர்களுக்கு எதுவும்
செய்யாதது தான்.
இளைஞர் அணி தளபதி என கூறும் ஸ்டாலினுக்கு 60 வயது ஆகிவிட்டது. கண் தெரியாதவர்,
காது கேட்காதவர்களை எல்லாம் இளைஞர் அணியில் வைத்திருந்தால் கட்சி எப்படி வளரும்.
சிறையில் இருக்கும் கனிமொழி தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று பேசினார்.
மு.க. ஸ்டாலினையே கடும் விமர்சனம் செய்த வாகை முத்தழகன் திமுகவில் இருந்து அதிரடியாக
நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் மதிமுகவில் இணைந்தார். ஆனால் வாகை முத்தழகன் செல்லும்
பொதுக் கூட்டம், திருமண விழா போன்ற பல நிகழ்ச்சிக்கு பழைய பாணியில் மஞ்சள் துண்டு
போட்டுக் கொண்டு தான் செல்கின்றாராம்.
திமுக தலைவர் கருணாநிதி தான் மஞ்சள் துண்டு போட்டு இருப்பார். இதனால் அவர் கடும்
விமர்சனத்திற்கு ஆளானார். இருப்பினும் அவர் மஞ்சள் துண்டை விடுவதாக இல்லை. அவர் வழியில்
திமுகவில் உள்ள பலரும் தனது தோளில் மஞ்சள் துண்டு போட்டு வருகின்றனர்.
ஆனால் திமுகவில் இருந்து மதிமுகவில் இணைந்த வாகை முத்தழகன், சமீபத்தில் விருதுநகரில்
நடைபெற்ற மதிமுக மாநாட்டில் கூட வைகோ முன்னிலையிலேயே மஞ்சள் துண்டோடு வலம் வந்து
மேடையில் பேசிவிட்டு சென்றாராம். இது குறித்து அவரிடம் கேட்டால் சிரிப்பையே பதிலாக
கொடுக்கின்றாராம்.












Click it and Unblock the Notifications