கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை சுட்டு.. ரூ. 26,600க்கு ஏலம்.. குழந்தைப் பேறு வேண்டி!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிபராசக்தி கோயிலில் நடைபெற்ற ஆடிப்பூரம் திருவிழாவில் கொதிக்கும் எண்ணெயில் இருந்து வெறும் கைகளால் வடை சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வாறு சுடப்பட்ட 7 வடைகள் ரூ. 26 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
திருவண்ணாமலை மாவட்டம், கேளூர் அடுத்த துரிஞ்சிகுப்பத்தில் ஆதிபராசக்தி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் 3ம் வெள்ளியன்று ஆடிபூரத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நேற்று 16ம் ஆண்டு திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, காலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஞ்சள் குடம் சமர்ப்பணம் செய்யப்பட்டது.தொடர்ந்து பால்குடம் எடுத்தல், பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தல், ஆட்டோ இழுத்தல், அந்தரத்தில் தொங்கி அம்மனுக்கு மாலை அணிவித்தல்,காரை முள் மிதித்தல், மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இவற்றைத் தொடர்ந்து இந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான கொதிக்கும் எண்ணெயில் கைகளால் வடை சுட்டு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் ஏழு வடைகள் அவ்வாறு சுடப்பட்டன.
இந்த வடைகளைச் சாப்பிடும் தம்பதிகளுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, இந்த வடைகளை ஏலத்தில் எடுக்க பெரும் போட்டி நிலவியது.
அதன்படி, முதல் வடை ரூ.11100க்கு ஏலம் போனது. அதனைத் தொடர்ந்து முறையே 2வது வடை ரூ.3700, 3வது வடை ரூ.4400 என மொத்தம் 7 வடைகளும் ரூ.26,600க்கு ஏலம் போனது.
பின்னர், மாலை 6 மணிக்கு அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications