ஏரி தூர்வாரும் பணி நடைபெறுகிறது.. மெதுவாக செல்லவும்.. எதுக்கு என்ன போட்டோ? பாருங்க மக்களே!
ஏரி தூர் வாரும் பணி நடைபெறுவதால் மெதுவாக செல்லவும் என வைக்கப்பட்டுள்ள பலகை படம் வைரலாகியுள்ளது.
சென்னை: ஏரி தூர் வாரும் பணி நடைபெறுவதால் மெதுவாக செல்லவும் என வைக்கப்பட்டுள்ள பலகை படம் வைரலாகியுள்ளது.
தஞ்சை - திருவாரூர் சாலையில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது வடுவூர் ஏரி. பறவைகள் சரணாலயமாகவும் உள்ளது இந்த ஏரி.
பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ள இந்த ஏரி கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனை தூர்வாருமாறு மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

ஏரி தூர்வாரும் பணி
இந்நிலையில் வடுவூர் ஏரி தற்போது தூர்வாரப்பட்டு வருகிறது. தூர்வாரப்படும் மண்ணை பொதுமக்கள் டிராக்டர்கள் மூலம் கொண்டு செல்கின்றனர்.

வாகனங்கள்
ஜேசிபி எந்திரங்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் வருவதும் போவதுமாக உள்ளன.

மெதுவாக செல்லவும்
இந்நிலையில் அந்த சாலையில் எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் ஏரியில் தூர்வாரம் பணி நடைபெறுகிறது. மெதுவாக செல்லவும் என்ற வாசகத்துடன் புகைப்படம் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.

முனுமுனுக்கும் மக்கள்
அதாவது ஃபிரண்ட்ஸ் படத்தில் வடிவேல், சுவற்றை தேய்க்கும் சூர்யாவை மெல்ல மெல்ல, வலிக்கப்போகுது என கூறும் போட்டோதான் அது. இந்த போட்டோ தூர்வாரும் பணிக்காக போடப்பட்டதா அல்லது மக்கள் மெதுவாக செல்ல வேண்டும் என்பதற்காக போடப்பட்டதா என அவ்வழியே கடந்த செல்லும் மக்கள் முனுமுனுத்து செல்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications