மதுகுடித்த குரங்கு போல மல்லாக்க படுத்து.. அடேங்கப்பா இந்த "பிக் பாஸ்" அதை மிஞ்சிரும் போலயே!
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுகள் மதுகுடித்த குரங்கின் ஆட்டம் போல இருப்பதாக வைகைச் செல்வன் சாடியுள்ளார்.
சென்னை: மதுகுடித்த குரங்கு போல மல்லாக்க படுத்து ஆடிய ஆட்டம் போல அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசிவருவதாக அதிமுகவின் தினகரன் கோஷ்டி செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் சாடியுள்ளார்.
அதிமுகவில் ராஜேந்திர பாலாஜி, வைகைச் செல்வன் மற்றும் வெற்றிவேல், எம்பி கோ. அரி ஆகியோருக்கு இடையேயான அக்கப்போர் ஓய்ந்தபாடில்லை. அதுவும் ராஜேந்திர பாலாஜியும் வைகைச் செல்வனும் தரம் தாழ்ந்து பேசிவருவதுதான் முகம் சுளிக்க வைக்கிறது.

சீக்கு கோழி, அழுகிய தக்காளி
வைகைச் செல்வனை சீக்கு வந்த பிராய்லர் கோழி, அழுகிய தக்காளி என தொடர்ந்து விமர்சிக்கிறார் ராஜேந்திர பாலாஜி. வைகைச் செல்வனோ, சினிமா போஸ்டர் ஒட்டி சினிமா துறைக்கு அமைச்சரானவர் என சிலேடையில் விமர்சித்தார்.

மதுகுடித்த குரங்கு
இதன்பின்னரும் ராஜேந்திர பாலாஜி அழுகிய தக்காளி, சீக்கு கோழி விமர்சனத்தைவிடவில்லை. இதற்கு பதிலடி கொடுத்துள்ள வைகைச் செல்வன், மதுகுடித்த குரங்கு மல்லாக்க படுத்து ஆடிய ஆட்டம் போல பேசுகிறார் ராஜேந்திர பாலாஜி.

அமைச்சர்தானா?
எதற்கு பேசுகிறோம்? எப்படி பேசுகிறோம்? எந்த அர்த்தத்தில் பேசுகிறோம்? என தெரியாமல் பேசுகிறார் ராஜேந்திர பாலாஜி. ஒருவர் மீது குற்றச்சாட்டு வைக்கிறோமே அதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்றெல்லாம் தெரியாமலேயே பேசுகிறார். அவர் ஒரு அமைச்சர் போல பேசவில்லை. அவர் அமைச்சர்தானா?

லாயக்கே இல்லாதவர்
வெந்ததை தின்று வாயில் வந்ததையெல்லாம் பேசியிருக்கிறார் ராஜேந்திர பாலாஜி. அவர் அமைச்சர் பதவிக்கே லாயக்கே இல்லாதவர் என சாடியுள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications