"அருப்புக்கோட்டை" வைகைச் செல்வனுக்கு மீண்டும் வாய்ப்பு !

Subscribe to Oneindia Tamil

சென்னை: அருப்புக்கோட்டை தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏவான வைகைச் செல்வனுக்கு இந்த முறை மீண்டும் சீட் வழங்கியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்து வந்தவர் வைகைச் செல்வன். ஆனால் அவரை கடந்த 2013ம் ஆண்டு டிஸ்மிஸ் செய்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் மேலே வரவே முடியவில்லை. இப்போது அவருக்கு மீண்டும் சீட் கிடைத்துள்ளதால் அவரது அரசியல் வாழ்க்கை மீண்டும் உதயமாகி விட்டதாகவே கருதப்படுகிறது.

ஆரவாரமாக ஆரம்பித்து சில காலம் அட்ரஸ் இல்லாமல் போன வைகைச் செல்வனின் வரலாற்றைப் பார்ப்போம்.

ஏகப்பட்ட பதவிகளுடன் வலம் வந்தவர்...

ஏகப்பட்ட பதவிகளுடன் வலம் வந்தவர்...

அதிமுகவின் இளைஞர் பாசறை செயலாளர், அரசு கொறாடா என பல பதவி வகித்தவர் வைகைச் செல்வன். மதுரை மாவட்டம் சிலமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தது இவரது அரசியல் வாழ்க்கையின் உச்சமாகும்.

சர்ச்சைகள்...

சர்ச்சைகள்...

ஆனால் பதவிக்கு வந்தது முதல் பல சர்ச்சைகளில் சிக்கினார் வைகைச் செல்வன். பள்ளிக் கல்வித்துறை செயலாளருடன் மோதல், நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்வதில் முறைகேடு, திமுகவுக்கு சாதகமான ஒரு எழுத்தாளருடன் நெருங்கிய நட்பு, கட்சியினரை மிரட்டும் வகையில் பேசுவது, மதிக்காமல் நட்பது என ஏகப்பட்ட சிக்கல்களைச் சந்தித்தார் வைகை.

ஆசிரியர் மாறுதலில் திருவிளையாடல்...

ஆசிரியர் மாறுதலில் திருவிளையாடல்...

இதேபோல ஆசிரியர்கள் இடமாறுதலிலும் அவர் திருவிளையாடலை நடத்தியதும் அவரது பெயர் கெட்டு பதவி போகக் காரணம். இப்படியாக அமமாவின் குட்புக்கிலிருந்து விலகிப் போன இவருக்கு இப்போது மீண்டும் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார் ஜெயலலிதா.

கலைராஜன் - செந்தமிழன்...

கலைராஜன் - செந்தமிழன்...

ஜெயலலிதாவின் நல்ல அப்பிபிராயத்தில் இருந்தவர்களான தி.நகர் வி.பி கலைராஜன், சைதாப்பேட்டை செந்தமிழன் ஆகியோருக்கு இப்போது சீட் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+