தமிழ்த்தாய் வாழ்த்தை விஜயேந்திரர் அவமதித்துவிட்டார்.. வைகோ கண்டனம்
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வைகோ கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி மடத்தின் இளைய அதிபர் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் உட்கார்ந்து இருந்தார். இது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

விஜயேந்திரரின் செயலுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் ''சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட தலைவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். ஆனால், அங்கிருந்த காஞ்சி சங்கரமடத்தின் இளைய பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி அவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல், தன் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். '' என்றுள்ளார்.
மேலும் '' நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டுப் பாடல் இசைக்கப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார். தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது அமர்ந்திருந்த செயல் தமிழ் மொழியையும், தமிழர்களையும் அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்திய செயலாகும்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் ''கடவுள் நம்பிக்கையில் மாறுபட்ட கருத்துள்ள தந்தை பெரியார் அவர்கள்கூட தான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார். நாட்டுப் பாடல் இசைக்கப்பட்டபோது அதுபோன்றே எழுந்து நின்று மரியாதை செலுத்தி இருக்கிறார்.'' என்றுள்ளார்.
மேலும் ''இப்படிப்பட்ட மரபுகளையும், நாகரிகப் பண்புகளையும் முறியடிக்கும் வகையில் காஞ்சி மடத்தின் இளைய பீடாதிபதி நடந்துகொண்ட செயலை மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.'' என குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் ''நடந்துவிட்ட தவறுக்கு வருத்தம் தெரிவித்து தமிழ் மொழியையும், தமிழ் மக்களையும் மதிப்பதாக காஞ்சி மடத்தின் இளைய பீடாதிபதி நடந்துகொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்.'' என குறிப்பிட்டு உள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications