சாதிக் பாட்ஷா மரணத்துக்கு திமுகவே காரணம் - முடிந்தால் என் மீது வழக்கு போடுங்கள்: வைகோ ஆவேசம்
திருச்சி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் விசாரிக்கப்பட்ட சாதிக் பாட்ஷாவின் மரணத்துக்கு திமுகதான் காரணம்; இதற்காக என் மீது முடிந்தால் வழக்கு தொடரட்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆவேசமாக கூறியுள்ளார்.
திருச்சியில் இன்று மக்கள் நலக்கூட்டணி சார்பில் வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் வைகோவுடன் வழக்கறிஞர்களான மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டுக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:
என் மீது தி.மு.க வழக்கு தொடுத்திருக்கிறது. இதே போன்ற ஒரு ஊழல் குற்றச்சாட்டை 2006 சட்டசபை தேர்தலின் போது கூறினேன். அப்போது என் மீது அவதூறு வழக்கு தொடுத்தார்கள். வழக்கு தொடுத்தவர்கள் 10 ஆண்டுகளாக இழுத்தடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
என்மீது வழக்கு போட சொல்லி கருணாநிதி சொல்லியிருக்க மாட்டார். 2 ஜி வழக்கில் கனிமொழி பலி கடாவாக்கப்பட்டார். இதில் ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்தவர்கள் கருணாநிதி குடும்பத்தில் பதுங்கிக்கொண்டார்கள்.
சாகித் பால்வா (ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர்) சென்னை வந்து மு.க. ஸ்டாலினை சந்தித்தபோது என்ன பரிமாற்றம் நடந்தது? கோடிக்கணக்கான ரூபாய் பணத்திற்கு டி.டி. கொடுக்கப்பட்டது என்கிறார்களே அது யாரிடம் கொடுக்கப்பட்டது.
ஸ்டாலினுக்கும் சாகித் பால்வாவுக்குமான உறவை அவர்களால் சாகடிக்கப்பட்ட சாதிக் பாட்ஷா சி.பி.ஐ விசாரணையில் சொன்னார் என்பதாலேயே தூக்கில் தொங்கினார். சாதிக் பாட்ஷாவின் மரணத்தின் பின்னனி என்ன என்பதை சி.பி.ஐ ஒழுங்காக விசாரிக்க வேண்டும்.
சாதிக் பாட்ஷா நினைவு நாளில் 'சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா' என அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் குமுறியிருக்கிறார்கள். சாதிக் பாட்ஷாவின் மரணத்திற்கு தி.மு.க தான் காரணம் என நான் குற்றம் சுமத்துகிறேன்.
இதற்கு ஒரு வழக்கு போட்டுக்கொள்ளட்டும். இதற்கு வழக்கு போட வக்கில்லாத ஸ்டாலின், ஆத்திரத்தில் மனசு துடித்து போய் கூட்டணி பேரத்துக்கு வழக்கு போட்டிருக்கிறார்.
2ஜி விவகாரத்தில் ஸ்டாலினுக்கும் பங்கிருக்கிறது என நான் சொல்கிறேன். இதற்கும் ஒரு வழக்கை போட்டுக்கொள்ளட்டும்.
இவ்வாறு ஆவேசமாக கூறினார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications