தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதை எதிர்த்து வைகோ வழக்கு
மதுரை: தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கக் கூடாது என்று கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வக ஆய்வு மையத்தை மத்திய அரசு அமைக்கவுள்ளது. இதற்கான உத்தரவையும் மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

பல்வேறு கட்சிகளும் இந்த ஆய்வகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. விவசாய அமைப்புகளும் போராடி வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆய்வகத்தை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்தால் அருகில் உள்ள அணைகள் பாதிக்கப்படும். இந்த ஆய்வு மையத்தால் பொட்டிபுரம் பகுதியில் விவசாய நிலம் பாதிக்கப்படும். எனவே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications