ம.தி.மு.க, வி.சி, இடதுசாரிகளின் மக்கள் நலன் கூட்டணியில் த.மா.கா. இணையுமா? ஜி.கே.வாசன் பதில்
ஊட்டி: மக்கள் நல கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணையுமா? என்ற கேள்விக்கு தன்னுடைய சுற்றுப்பயணம் முடிந்த பிறகு அறிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் மக்கள்நல கூட்டணியாக உருவெடுத்ததை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று அறிவித்தார். அப்போதே, கூட்டணியில் சேருவதற்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கும் அழைப்பு விடுத்தார்.

இதுகுறித்து ஜி.கே.வாசன் கூறுகையில், நான்கு கட்சிகளைச் சேர்ந்த மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கம் மக்கள் நலனுக்காக மட்டுமல்லாமல், தேர்தலுக்காக செயல்படும் கூட்டணி என்று அறிவித்திருக்கிறார்கள். தேர்தலில் அவர்கள் எந்த கட்சிகளுடன் கூட்டணியாக செயல்பட விரும்புகிறார்கள். எந்த கட்சிகள் உடன் கூட்டணியாக செயல்பட விரும்பவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.
த.மா.கா.வை தங்கள் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். அதற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரத்தில் த.மா.கா.வின் தேர்தல் வியூகத்தை, முடிவுகளை என்னுடைய சுற்றுப்பயணம் முடிந்த பிறகே அறிவிப்பதாக முடிவெடுத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications