மலேசியாவில் இருந்து திருப்பி அனுப்பினாலும்... செய்தித்தாள்களில் தலைப்பு செய்தியான வைகோ
மலேசியாவிற்குள் நுழைய முடியாமல் திரும்பிய வைகோ அங்குள்ள தமிழ் செய்திதாள்களில் தலைப்பு செய்திகளில் இடம் பிடித்துள்ளார்.
சென்னை: மலேசியாவுக்குள் நுழைய மதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்ததோடு, அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தது. மலேசிய அரசு அவரை நேற்று இரவு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. வைகோ தடுத்து நிறுத்தப்பட்ட செய்தி மலேசியாவில் உள்ள தமிழ் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியின் மகள் திருமணத்தில் பங்கேற்பதற்காக வைகோ அந்நாட்டுக்கு சென்றிருந்தார். ஆனால் மலேசியாவுக்கு ஆபத்தானவர்கள் என்ற பட்டியலில் வைகோ பெயர் இருக்கிறது.

வைகோ, விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி தங்களது நாட்டில் நுழைய வைகோவுக்கு மலேசிய அரசு தடை விதித்துள்ளது. மேலும் வைகோ மீது இலங்கையில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் மலேசிய அரசு கூறியுள்ளது.
வைகோவின் பாஸ்போர்ட்டையும் மலேசிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ளது மலேசியா. அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இரவு 11.45 மணி அளவில் சென்னை வந்தடைந்தார் வைகோ.
வைகோவை மலேசியாவிற்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பியது கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் பலரும் வைகோவிற்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டனர்.
வைகோவின் மலேசியா வருகை, அங்கு அவருக்கு நேர்ந்த அவமானவங்கள் மலேசியா தமிழர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அங்குள்ள தமிழ் நேசன், மக்கள் ஓசை ஆகிய தமிழ் செய்தி தாள்களில் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டுள்ளனர்.
வைகோவை திருப்பி அனுப்பினா போதுமா? வைகோ பற்றிதானே இன்று மலேசியா பூராவும் செய்தியாகியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications