பொதுவாழ்வுப் பொன்விழா: கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கு வைகோ அழைப்பு
டெல்லி: மக்கள் நலக் கூட்டணி தமிழக அரசியலில் பெரும் சக்தியாக உருவெடுக்கும்; ‘தொலைநோக்குப் பார்வையோடு இக்கூட்டணியை நீண்ட காலத்திற்கு முன்னெடுத்துச் செல்வோம் என்று டெல்லியில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை சந்தித்த வைகோ கூறியுள்ளார்.
மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இன்று காலை பத்தரை மணி அளவில் டெல்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான அஜய் பவனுக்குச் சென்றார். கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் செயலாளர் ஏ.பி.பரதன், தேசியச் செயலாளர் டி. இராஜா ஆகியோர் வரவேற்றனர். அவர்களுக்கு வைகோ பொன்னாடை போர்த்தினார்.

தமிழக அரசியலில் மக்கள் நலக் கூட்டணி அமைந்தது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனர். அப்போது அவர், நவம்பர் 25 ஆம் தேதி கோவையில் நடைபெற இருக்கும் மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு வைகோ அழைப்பு விடுத்தார். ‘தங்கள் கட்சியின் சார்பில் முக்கியத் தலைவர் கலந்து கொள்வார்' என்று கூறினர்.
வரும் நாட்களில் மக்கள் நலக் கூட்டணி தமிழக அரசியலில் பெரும் சக்தியாக உருவெடுக்கும்; ‘தொலைநோக்குப் பார்வையோடு இக்கூட்டணியை நீண்ட காலத்திற்கு முன்னெடுத்துச் செல்வோம்' என்று வைகோ கூறியதை ஏற்றுக்கொண்டு, தாங்களும் அப்படியே கருதுவதாகத் தெரிவித்தனர்.

2016 பிப்ரவரி 9 ஆம் தேதி சென்னை காமராசர் அரங்கத்தில் நடைபெற இருக்கின்ற வைகோ பொதுவாழ்வுப் பொன்விழா நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கும் பொன்விழா மலர்க்குழுத் தலைவர் கணேசமூர்த்தியின் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட சுதாகர் ரெட்டி அவர்கள், ‘பொன்விழாவில் கலந்து கொள்வதாக உறுதி அளித்ததோடு, மலருக்கு வாழ்த்துக் கட்டுரையும் அனுப்பி வைப்பதாகக் கூறினார்.
இதன்பிறகு, பகல் 12 மணிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட (மார்க்சிஸ்ட்) கட்சியின் தலைமை அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனத்திற்கு வைகோ சென்றார். அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பூங்கொத்து கொடுத்து வைகோவை வரவேற்றார்.
‘தமிழ்நாட்டில் தி.மு.க., அண்ணா தி.மு.க.வுக்கு மாற்றான ஒரு அரசியல் சக்தி உருவாவதுதான் தமிழகத்தின் அரசியல் தேவை' என்று காலம் சென்ற ஹர்கிசன் சிங் சுர்ஜித் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டதை நினைவுகூர்ந்ததோடு, ‘மக்கள் நலக் கூட்டணி வலுவுள்ள சக்தியாக உருவவெடுக்கும்' என்று சீதாராம் யெச்சூரி நம்பிக்கை தெரிவித்தார். நவம்பர் 25 கோவை பொதுக்கூட்டத்திலும், 2016 பிப்ரவரி 9 இல் சென்னையில் நடைபெறும் வைகோ பொதுவாழ்வுப் பொன்விழா நிகழ்ச்சியிலும் தாம் கலந்து கொள்வதாகக் கூறினார். தமிழக அரசியல் குறித்து இருவரும் ஒரு மணி நேரம் விவாதித்தனர்.
மதிமுக பொதுச்செயலாளர் பொதுவாழ்வுப் பொன்விழா நிகழ்ச்சிக்கு வருமாறு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications