நேர்மையான நிர்வாகத்திற்கு என்னை அர்ப்பணிப்பேன்... வைகோவிடம் பிரதாப் முருகன் உறுதி!
தமிழகத்தின் எதிர்கால நலனுக்கும், நேர்மையான நிர்வாகத்திற்கும் தன்னை அர்ப்பணிப்பேன் என்று ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த பிரதாப் முருகன் கூறியுள்ளார்.
சென்னை: அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் தமிழ் நாட்டில் முதலிடமும், அகில இந்தியாவில் 21 ஆவது இடமும் பெற்ற
பிரதாப் முருகனுக்கு வைகோ நேரில் பாராட்டு தெரிவித்தார். அப்போது வைகோவிடம் பேசிய பிரதாப் முருகன், தமிழகத்தின் எதிர்கால நலனுக்கும், நேர்மையான நிர்வாகத்திற்கும் தன்னை அர்ப்பணிப்பேன் என்று கூறினார்.
நடந்து முடிந்த அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான (ஐ.ஏ.எஸ்.) தேர்வில் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பைச் சேர்ந்த பிரதாப் முருகன் தமிழ்நாட்டில் முதலிடமும், அகில இந்தியாவில் 21 ஆவது இடமும் பெற்றது தமிழ்நாட்டிற்கே பெருமையாகும் என்று சென்னையில் அவர் வசிக்கும் இல்லத்திற்கு வைகோ அவர்கள் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து பாராட்டுத் தெரிவித்தார்.

பிரதாப் முருகன் அவர்கள் வத்திராயிருப்பிலும் பின்னர் பாளையங்கோட்டையிலும் பள்ளிப் படிப்பை முடித்து, அண்ணா பல்கலைக் கழகத்தில் வேதியியல் பொறியாளர் பட்டம் பெற்று, டெல்லியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி கல்விக் கூடத்தில் பயின்று, தேர்வில் கலந்துகொண்ட முதல் முறையிலேயே சிறப்பான வெற்றி பெற்று தமிழ்நாட்டில் முதல் இடத்துக்கு வந்துள்ளார்.
22 வயதில் இந்த சாதனை நிகழ்த்தி உள்ள பிரதாப் முருகன் அவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தேர்ந்தெடுத்த பாடம் அரசியலும் பன்னாட்டு உறவுகளும் ஆகும். நேர்காணல் தேர்வில் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் அற்புதமாக பதில் அளித்து தேர்வாளர்களின் பாராட்டைப் பெற்று இருக்கிறார்.
ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து முனைப்புடன் கல்வி பயின்று உயர்ந்த வெற்றியைப் பெற்றுள்ள இளைஞரான நீங்கள் நிர்வாகத்துறையில் உன்னதமான இடத்தை அடைந்து பெருமைக்குரிய சேவை செய்ய வாழ்த்துகிறேன் என்று வைகோ அவர்கள் பாராட்டுத் தெரிவித்தார்.
அப்போது அவர், தமிழகத்தின் எதிர்கால நலனுக்கும், நேர்மையான நிர்வாகத்திற்கும் தன்னை அர்ப்பணிப்பேன் என்று வைகோவிடம் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications