மானாமதுரை நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கொலை.. உடலுக்கு வைகோ அஞ்சலி
மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் உடலுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார்.
மானாமதுரை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த ராம்நாத் என்பவருக்கும் அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் பொன்முத்துராமலிங்கம் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் மானாமதுரை வழக்கறிஞர்கள் குற்றாலத்துக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.இதற்காக அனைத்து வழக்கறிஞர்களும், மானாமதுரை குற்றவியல் நீதிமன்றம் வளாகம் வந்து அங்கிருந்து மொத்தமாக செல்ல திட்டமிட்டனர்.
அப்போது அங்கு வந்த ராம்நாத்துக்கும், முத்துராமலிங்கத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துராமலிங்கம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராம்நாத்தை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
படுகாயமடைந்த ராம்நாத், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதையடுத்து வழக்கறிஞர் பொன் முத்துராமலிங்கம் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.
இந்த நிலையில், உயிரிழந்த வழக்கறிஞர் ராம்நாத் உடலுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications