மதிமுக கரூர் மாவட்ட செயலாளர் பரணி கே.மணி நீக்கம்- வைகோ நடவடிக்கை
சென்னை: மதிமுகவின் கரூர் மாவட்ட செயலாளர் பரணி கே.மணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால் அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக வைகோ அறிவித்துள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக பாலவாக்கம் சோமு கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து சேலம் மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் மகளிரணி செயலாளர் குமரி விஜயகுமார் ஆகியோர் கடந்த வாரம் திமுகவில் இணைந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று மாநில பொருளாளர் மாசிலாமணி, மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து விலகுவதாக கூறினர். மதிமுகவில் இருந்து 19 மாவட்ட செயலாளர்கள் விலக தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் மாசிலமணி விலகியதுதான் வைகோவே எதிர்பாராதது என்கின்றனர்.
கட்சித்தாவல், விலகல் நடந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயர்நிலைக் குழு கூட்டத்தில் உருக்கமாக பேசியுள்ளார் வைகோ. ஆனாலும் சிலர் கட்சித்தாவ தயாராகி வருகின்றனர் இந்த நிலையில் கரூர் மாவட்ட செயலாளர் பரணி கே.மணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார் வைகோ.
கலிங்கபட்டியில் கூட்டம்
பரபரப்பான இந்த சூழ்நிலையில் மதிமுக மாவட்டச் செயலாளர்கள், மற்றும் உயர் நிலைக்குழு, ஆட்சி மன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வுமைய உறுப்பினர்கள் கூட்டம் செப்டம்பர் 22ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு, அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில், கலிங்கப்பட்டியில் நடைபெற உள்ளது.
மதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் பலர் வைகோவின் அரசியல் பாதையை குறித்து கடும் விமர்சனம் செய்து, வெளியேறியுள்ள நிலையிலும், மதிமுகவை திமுக உடைக்க சதி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவே குற்றம் சாட்டியுள்ள நிலையிலும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications