கருணாநிதி ரத்த அழுத்தம் எப்படி சீரடைந்தது? வைகோ சொன்ன நெகிழ்ச்சி காரணம்
Recommended Video

சென்னை: தொண்டர்கள் வாழ்த்து கோஷத்தால் கருணாநிதியின் நாடித் துடிப்பு சீரடைந்தது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
காவிரி மருத்துவமனையில் இன்று திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பற்றி கேட்டறிய வந்திருந்தார் வைகோ. பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

என்னை அரசியலில் வார்த்து வளர்த்தவர் கருணாநிதி. தாயினும் சிறந்து பாசமூட்டி வளர்த்தவர். அவரது உடல் நிலை பற்றி தம்பி ஸ்டாலினுடன் பேசிக்கொண்டிருந்தேன். பேராசிரியர் அன்பழகனும் இருந்தார்.
கவலைகள் நீங்க, நம்பிக்கை பெற்று, முழுமையாக தேறி வருவார் என்ற நம்பிக்கையுள்ளது. மிக துரிதமாக கருணாநிதி முழு நலம் பெற்று திராவிட இயக்கத்தை இந்த காலகட்டத்தில் உந்துதலோடு கொண்டு செல்ல ஸ்டாலினுக்கு வழிகாட்டும் நிலையில் மீண்டு வருவார், நலம் பெறுவார் என்ற நம்மதியோடு நான் போகிறேன். மருத்துவர்களை நான் சந்திக்கவில்லை. ஸ்டாலினிடம் கேட்டு அறிந்து கொண்ட தகவல்களை நான் உங்களிடம் தெரிவித்தேன் என்ற வைகோ, மேலும் ஒரு தகவலை தெரிவித்தார்.
நான் ஸ்டாலினிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ஒருவர் எனக்கு ஒரு தகவலை தெரிவித்தார். அவர் டாக்டராக இருக்கும் என நினைக்கிறேன். கருணாநிதியின் ரத்த அழுத்தம் மிகவும் குறைந்தபோது, அவரை ஆம்புலன்சில் ஏற்றி காவிரி மருத்துவமனைக்கு புறப்பட்டனர். அவர் கோபாலபுரம் வீட்டை தாண்டியபோது, அங்கே நின்றிருந்த திமுக தொண்டர்கள், கருணாநிதியை வாழ்த்தி கோஷம் எழுப்பினர்.
அந்த கோஷம் அவர் நாடி நரம்புகளை மீண்டும் சீராக்கியுள்ளது. எனவேதான், கருணாநிதி உடல் நிலை மீண்டும் சீரடைந்துள்ளது என்று அவர் என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு வைகோ கூறினார்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications