வரும் தேர்தலில் மதிமுகவுக்கு வாய்ப்பு கொடுங்கள் - வைகோ பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

சாத்தான்குளம்: நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு வாய்ப்பு தாருங்கள் என சாத்தான்குளத்தில் நடந்த வாகன பிரசாரத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ பேசினார்.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் மதிமுக பொது செயலாளர் வைகோ வாகன பிரசாரத்தை தொடங்கினார். கருங்குளம், சேரக்குளம், பேய்குளம் வழியாக சாத்தான்குளம் பஸ் நிலையம் வந்தார்.

அங்கு திறந்த வேனில் நின்று வைகோ பேசியதாவது, மக்கள் நலனுக்காக போராடிய தகுதியோடு உங்களை சந்திக்க வந்துள்ளேன். பெரியார் சொன்ன பண்பாட்டை மதித்து எங்கள் தன்மானத்தை விட்டு கொடுக்காமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை இருந்த போதிலும் மக்களுக்காக ஓய்வில்லாமல் பல போராட்டங்களை நடத்தினோம்.

Vaiko seeks people's support

கேரள அரசு தண்ணீர் தர மறுத்தபோதும உரிமையோடு போராடியது மதிமுகதான். காமராஜர் மணி மண்டபம் அமைக்க மறுத்த போது அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் பேசி அனுமதி வாங்கி கொடுத்தேன்.

காமராஜர், அண்ணா ஆட்சி காலத்தில் தமிழகத்தில் மது இல்லை. இப்போதுள்ள அரசு அதைபற்றி கவலைப்படவில்லை. ம்க்களி்ன் வாழ்வாரத்திற்காக போராடி வருவதால் எங்களுக்கு தகுதி இருக்கிறது. நேர்மை, உண்மை, உழைப்பு ஆகியவற்றுடன் வாக்கு கேட்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாய்ப்பு கொடுங்கள் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+