வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, பாரதிராஜா ஆகியோரை கைது செய்ய எச்.ராஜா வலியுறுத்தல்
வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, பாரதிராஜா ஆகியோரை கைது செய்ய எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video

காரைக்குடி : தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசி வரும் வைகோ, சீமான், திருமுருகன் காந்தி, பாரதிராஜா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா இன்று காரைக்குடியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தினம் தினம் ஊழல் நடந்தது. தற்போதைய பாஜக ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது.

அதுபோல ஜிஎஸ்டி வரி விதிப்பினால், ஏழை மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதுபோல, 7 கழிப்பறைகள் கட்டப்பட்டு ஏழை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்படக் காரணம் தமிழக அரசில் இருக்கும் ஊழல் தான். ஆனால், சிலர் ஜிஎஸ்டி வரியை அதற்குக் காரணம் காட்டுகிறார்கள். அது திட்டமிட்ட சதி.
தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த சில அமைப்புகள் கடந்த 3 மாதமாக சதித்திட்டம் தீட்டி வருகின்றன. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வரும் வைகோ, சீமான், திருமுருகன்காந்தி, பாரதிராஜா ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications