கூட்டணி பேரத்தை மறுத்த தேமுதிக... வைகோ பகிரங்க மன்னிப்பு கேட்க ஹெச்.ராஜா வலியுறுத்தல்
சென்னை: தேமுதிகவுடன் கூட்டணி பேரம் பேசியதாக தாம் கூறிய குற்றச்சாட்டை வாபஸ் பெற்று மதிமுக பொதுச்செயலர் வைகோ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
திமுக, பாஜக ஆகிய கட்சிகள் தேமுதிகவுடன் கூட்டணிக்காக பேரம் பேசின என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்து வருகிறது. இது தொடர்பாக பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜா கூறியதாவது:

கூட்டணி பேரம் எதுவுமே நடக்கவில்லை என்று விஜயகாந்த் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆகையால் அரசியல் நாகரீகம் கருதி தாம் முன்வைத்த குற்றச்சாட்டை வாபஸ் பெற்று வைகோ பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஒரு லட்சியத்துக்காக சிறிய சிறிய கட்சிகள் கூட்டணி சேர்ந்தால் சிறிய சிறிய விவகாரங்கள் பிரச்சனையாக இருக்காது. ஆனால் அரசியல் அதிகாரப் பசிக்காக கூட்டணி வைத்தால் அது நீடிக்காது. மக்கள் நலக் கூட்டணியானது ஏப்ரல் 22-ந் தேதிவரையும் நீடிக்குமா என்பதே சந்தேகம்தான்.
வைகோ நிலையான முடிவெடுக்காதவர்... 2001-ம் ஆண்டு தேர்தலில் தொகுதி எண்ணிக்கைகள் முடிவான பிறகு கூட்டணியை விட்டு வெளியேறினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வண்டலூர் பொதுக்கூட்டத்துக்கு வருவதாக உறுதியளித்துவிட்டு முதல்நாள் வரமாட்டேன் என்று சொன்னவர். அவரை ஒரு பொருட்டாக மதித்து பாஜக எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் எடுக்காது.
இவ்வாறு ஹெச். ராஜா கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications