முதல்வரை எதிர்த்து தடையை மீறி அறவழியில் நாளை ஆர்ப்பாட்டம்: வைகோ அதிரடி
தடையை மீறி நாளை அறவழியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வலியுறுத்தி நாளைச் சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எந்த ஆட்சேபனையும் தமிழக அரசு செய்யவில்லை. தமிழகத்துக்குச் செய்த பச்சை துரோகம் அதிமுக அரசு செய்துவருவதை எதிர்த்து முதல்வர் பழனிச்சாமி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரி நாளைச் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக வைகோ தெரிவித்திருந்தார்.

இந்தப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதுகுறித்து சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் வைகோ செய்தியாளர்களிடம் பேசிய போது, "முதல்வருக்கு எதிராக மதிமுக சார்பில் நடக்கவிருந்த போராட்டத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் நாளைத் தடையை மீறி அறவழியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்" என்று கூறியுள்ளார்.
மேலும், எடப்பாடி அரசு தமிழக நலன் அனைத்தையும் மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டது என்றும் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
-
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
“தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து கமிஷன், கரெப்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை”.. விஜய்யை புகழ்ந்த வைகோ! -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications