கொள்கையே இல்லாத கட்சி அதிமுக... கொள்கையை இழந்த கட்சி திமுக... வைகோ
விழுப்புரம்: தமிழகத்தை பொறுத்த வரை அதிமுக கொள்கையே இல்லாத கட்சியாக உள்ளது. திமுகவோ கொள்கையை இழந்த கட்சியாக உள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் மதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு வைகோ பேசியது: மக்கள் நல கூட்டியக்கம் மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. இந்த கூட்டியக்கம் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தேர்தல் சமயத்தில் இந்த இயக்கம் மாபெரும் சக்தியாக உருவெடுக்கும். இந்த இயக்கத்துக்கு அரசியல் கட்சிகள் வரலாம், போகலாம். ஆனால் மக்கள் நல கூட்டு இயக்கம் சீட்டுக்காகவோ தேர்தலுக்காகவோ அமைக்கப்பட்டது இல்லை.

நான் இதுவரை 50 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்துள்ளேன். 5 ஆயிரம் கிலோ மீட்டர் நடைபயணம் சென்றுள்ளேன்.
நான் விடுதலைப் புலிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அரசியல் நடத்துகிறேன் என்று சிலர் கூறி வருகிறார்கள். அவர்களே துன்பத்தில் உள்ளனர். அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு நான் அரசியல் நடத்தினால் அது போன்ற ஒரு ஈனத் தொழில் வேறு எதுவும் கிடையாது. இவ்வாறு அவர் பேசினார்.
தமிழகத்தில் முகம் தெரியாத நபர்களுக்கு மதிமுக முகவரி கொடுத்துள்ளது. அதுபோன்றவர்களை, சிலர் அழைத்துக்கொள்கின்றனர். அவர்கள் எங்கு சென்றாலும் நல்லபடி இருக்கட்டும். இந்த கட்சிக்கு ஆபத்து வரும்போதெல்லாம் துணையாக நின்றவர்கள் தொண்டர்கள்.
தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக கொள்கையே இல்லாத கட்சியாக உள்ளது. திமுக கொள்கையை இழந்த கட்சியாக உள்ளது. மதிமுக மட்டுமே கொள்கையோடு லட்சக்கணக்கான தொண்டர்களை வைத்திருக்கும் இயக்கமாக செயல்படுகிறது என்றார் வைகோ.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications