மலேசியாவில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் இலங்கைத் தூதரை வெளியேற்றுக - வைகோ
சென்னை: தமிழர்களுக்கு எதிராக செயல்படும் மலேசியாவுக்கான இலங்கைத் தூதரை அந்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இலங்கையில் ராணுவத்துக்கும் , விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரின் போது லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது, இலங்கை ராணுவத்தின் உளவுப்பிரிவு அதிகாரியாக இருந்தவர் இப்ராகிம் சகீப் அன்சரி. அவர் தற்போது மலேசியாவுக்கான இலங்கை தூதராக உள்ளார்.

இலங்கைத் தமிழர்களுக்காக ஆதரவுக்குரல் எழுப்பும் மலேசியா வாழ் இலங்கைத் தமிழ் இளைஞர்களை விடுதலைப்புலிகள் என முத்திரை குத்தி இலங்கை அரசிடம் ஒப்படைக்கும் செயலில் அவர் ஈடுபடுகிறார். மலேசியாவில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த உலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்க சென்ற என்னை, அங்கு வரவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளிலும் இப்ராகிம் சகீப் அன்சர் ஈடுபட்டார்..
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் என்ற மாயத்தோற்றத்தை மலேசிய அரசு உருவாக்குகிறது என மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வரும், உலகத் தமிழர் மையத்தின் தலைவருமான பேராசிரியர் ராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் இனத்துக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் இலங்கைத் தூதர் இப்ராகிம் அன்சரை, மலேசியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதையே மதிமுகவும் வலியுறுத்துகிறது'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications