என்னை உருவாக்கிய கருணாநிதி... பிறந்த நாள் வாழ்த்தில் வைகோ உருக்கம்
திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

திருவாரூர்: திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ம் ஆண்டு பிறந்தார். அவரது பிறந்த நாளை தமிழகம் முழுக்க திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள்.

அவரது பிறந்த நாளுக்கு கட்சி தலைவர்கள் எல்லோரும் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் அவரது நெருங்கிய நண்பரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக கழகத்தை உருவாக்கி காத்தவர் என் அண்ணன் கருணாநிதி. கருணாநிதியின் பேச்சுகளை நேரில் பார்த்து மனம் நெகிழ்ந்து இருக்கிறேன். தமிழகம் முழுக்க திமுகவை வளர வைத்து கட்டி காத்தவர் கருணாநிதி.
என்னை அரசியலில் உருவாக்கியவர் கருணாநிதி. நான் அரசியலில் வளர்ந்ததற்கு கருணாநிதிதான் காரணம். அண்ணாவோடு கருணாநிதி திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபட்டு இருக்கிறார். மக்களுக்காக அண்ணாவோடு சிறுவயதிலேயே சிறை சென்றவர் கலைஞர்.
திமுகவினருக்கு என் மீது கோபமும், வெறுப்பும் உண்டு. இப்போது அந்த மனக்கசப்புகள் குறைந்து அகன்று உள்ளது. ஆனால் என்னை உருவாக்கியவர் கருணாநிதி. எப்போது எனக்கு வழிகாட்டியாக இருப்பது அண்ணன் கலைஞர் கருணாநிதிதான், என்று வைகோ தனது வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications