ஹார்வார்டு பல்கலை. தமிழ் இருக்கைக்கு கவிஞர் வைரமுத்து ரூ5 லட்சம் நன்கொடை!
Recommended Video

சென்னை: ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய கவிஞர் வைரமுத்து ரூ.5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.
சென்னையில், இன்று மாலை நடைபெற்ற, ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கும் விழாவில் பேசிய வைரமுத்து, மேலும் கூறியதாவது: சீன மொழிக்கு இணையாக இருக்கும் மொழிதான் தமிழ் மொழி. இந்தியாவின் சரிபாதி பண்பாடு தமிழ் பண்பாடு .

எல்லாத் தகுதியும் உடைய தமிழ் மொழியை ஹார்வர்டு பல்கலைக்கு தாமதமாக கொண்டு சென்றுள்ளோம் என்பதே என் ஆதங்கம். அறிவுலகம் வகுத்த தகுதிக்கும் மேல் தகுதி கொண்டது தமிழ் மொழி . ஹார்வர்ட் தமிழ் இருக்கை தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் என நம்புகிறேன்.
தமிழ் செம்மொழி என்ற அறிவிப்புக்கு காரணமாக இருந்த கருணாநிதி, மன்மோகன் சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு வைரமுத்து தெரிவித்தார்.
சென்னை புத்தக காட்சியில் விற்பனையான தமது புத்தகங்களின் முழுத்தொகையை ஹார்வார்டு பல்கலைக்கழகத்திற்கு தமிழ் இருக்கை அமைக்க நிதியாக வழங்கினார். ஏழைக் கவிஞன் என்பதால்தான் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.5 லட்சம் கொடுத்துள்ளேன் என்று வைரமுத்து அப்போது குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications