‘தூய்மை இந்தியா’ விற்காக பாடல் எழுதும் வைரமுத்து
சென்னை: பிரதமர் மோடியின் கனவு திட்டமான ‘தூய்மை இந்தியா'திட்டத்திற்கு திரைப்பட பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து விழிப்புணர்வு பாடல் எழுத இருக்கிறார். இந்த தகவலை பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கவிப்பேரரசு வைரமுத்துவை திங்கள்கிழமை வானதி சீனிவாசன் சந்திது பேசினார். அப்போது அவர், தமிழுக்காக குரல் கொடுத்துவரும் பாஜக எம்.பி. தருண் விஜய்க்கு பாராட்டு விழா நடத்தியதற்காகவும், அவரின் முயற்சிகளுக்கு ஆதரவு அளித்து வருவதற்காகவும் நன்றி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் "தூய்மை இந்தியா' திட்டத்தை வைரமுத்து வரவேற்றதாக வானதி சீனிவாசன் கூறியுள்ளார். அந்தத் திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பாடல் ஒன்றை இயற்றித் தருமாறு தான் விடுத்த வேண்டுகோளை வைரமுத்து ஏற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
வைரமுத்து எழுதும் பாடல் நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

திமுக ஆதரவாளரான வைரமுத்து சமீபத்தில் பாஜக எம்.பிக்கு பாராட்டுவிழா நடத்தினார். இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக திட்டம் ஒன்றிர்க்கு பாடல் எழுத உள்ளார்.
தூய்மை இந்தியா திட்டத்திற்காக நடிகர்கள் துடைப்பம் எடுத்தால் வைரமுத்து தன் பேனாவினால் தூய்மை இந்தியாவிற்காக விழிப்புணர்வு பாடல் எழுத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications