தீமை வந்ததால் நன்மை பிறந்தது.. எங்கெங்கோ இருந்த தமிழ் சிங்கங்கள் ஓரணியில் திரண்டன: வைரமுத்து
எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு, அது எங்கெங்கோ இருந்த தமிழ் சிங்கங்களை ஒன்று திரட்டியது என்று வைரமுத்து பேசினார்.
Recommended Video

சென்னை: எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு, அது எங்கெங்கோ இருந்த தமிழ் சிங்கங்களை ஒன்று திரட்டியது என்று வைரமுத்து, ஆண்டாள் விவகாரத்தில் அவருக்காக ஆதரவளித்த தமிழ் ஆர்வலர்கள் குறித்து பேசினார்.
புத்தக கண்காட்சியில் வைரமுத்துவின் புத்தகங்கள் ரூ. 4.61 லட்சத்துக்கு விற்பனையானது. அந்த தொகையுடன் கூடுதல் தொகை சேர்த்து ரூ. 5 லட்சமாக ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு வழங்க வைரமுத்து முடிவு செய்தார்.
அதன்படி சென்னையில் நடந்த ஹார்வார்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கும் விழாவில் தமிழ் இருக்கைக் குழு தலைவர் ஆறுமுகத்திடம் இந்த தொகையை வழங்கினார் வைரமுத்து. அப்போது அவர் பேசுகையில் 3000 ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியினால் ஹார்வார்டு பல்கலைக்கழகத்துக்கு பெருமை. சீன மொழிக்கு இணையாக இருக்கும் மொழி தமிழ்மொழிதான்.

அறிவுலகம் வகுத்த தகுதி
இதுவரைக்கும் இருக்கையில் இருக்கிற மொழிகள் எல்லாம் வாழும் என்று சொல்ல முடியாது. தமிழ் செம்மொழி என்ற அறிவிப்புக்கு காரணமாக இருந்த கருணாநிதி, மன்மோகன் சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அறிவுலகம் வகுத்த தகுதிக்கும் மேல் தகுதி கொண்டது தமிழ் மொழி. எல்லாத் தகுதியும் உடைய தமிழ் மொழியை ஹார்வர்டு பல்கலைக்கு தாமதமாக கொண்டு சென்றுள்ளோம்.

திராவிட பண்பாடு
ஏழைக் கவிஞன் என்பதால்தான் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு ரூ.5 லட்சம் கொடுத்துள்ளேன். திராவிட பண்பாடு கனலோடு இருக்கிறது என்பதை ஐரோப்பியர்கள் அறிய வேண்டும். இந்தியாவுக்கு சென்றால் வடக்கே மட்டும் ஆய்வு செய்யாமல் தெற்கே செல்ல வேண்டும் என கூறுவார்கள். தமிழையும் சேர்த்தால்தான் பண்பாடு 100 விழுக்காடு நிரம்பும்.

நன்மை உண்டு
எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு என்பார்கள். எனக்கு ஒரு தீமை வந்தபோது எங்கெங்கிருந்தோ இருந்த தமிழ் சிங்கங்கள் ஒன்று திரண்டன என்றார் வைரமுத்து. ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து ஆண்டாள் குறித்து அவதூறு கூறியதாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு சர்ச்சை எழுந்தது.

ஆண்டாள் சர்ச்சைக்கு பிறகு...
வைரமுத்துவுக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியது. அப்போது தமிழ் ஆர்வலர்கள் பலரும் வைரமுத்து கூறிய கருத்து குறித்து அவருக்கு ஆதரவாகவே விளக்கமளித்தனர். அந்த சர்ச்சைக்கு பிறகு வைரமுத்து பேசிய முதல் நிகழ்ச்சி இந்த ஹார்வார்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதி வழங்கும் விழாவாகும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications