சசிகலாவையெல்லாம் பார்க்க முடியாது.. ப.வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர் சரஸ்வதிக்கு அனுமதி மறுப்பு
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 15ஆம் தேதியன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலா சிறை சென்று இன்றோடு ஒரு வாரகாலமாகிவிட்டது. அவரைக்காண சென்ற கோகுல இந்திரா, பா. வளர்மதி, சி.ஆர். சரஸ்வதிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மூவரும் சோகத்தோடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் நேற்று சசிகலாவை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்தநிலையில், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் நடிகை சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் இன்று பெங்களூரு சென்றனர்.

பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் நீண்ட நேரம் காத்திருந்த அவர்கள் சிறை அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாம். தண்டனை பெற்று சிறையில் உள்ள குற்றவாளியை வாரத்திற்கு 2 முறை மட்டுமே பார்வையாளர்களை சந்திக்க அனுமதிப்போம் என்று சிறை நிர்வாகம் கூறிவிட்டதால் மூன்று பேரும் சோகத்தோடு திரும்பிவிட்டார்களாம். இதேபோல அமைச்சர்களும் சசிகலாவை சந்திக்காமலேயே திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினசரியும் சிலர் சசிகலாவை சந்தித்து பேச பெங்களூரு சென்று வருகின்றனர். இதையே காரணமாக வைத்து சசிகலாவை சென்னை புழல் சிறைக்கு அவரது வழக்கறிஞர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications