பெரியார் விருதுக்கு ஏன் தேர்வு? மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பதிலடி கொடுத்த பா. வளர்மதி
பெரியார் விருதுக்கு தம்மை தேர்வு செய்ததை விமர்சிக்கும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் வளர்மதி.
சென்னை: தமிழக அரசின் தந்தை பெரியார் விருதுக்கு தம்மை தேர்வு செய்ததை சமூக வலைதளங்களில் விமர்சித்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழக அரசின் தந்தை பெரியார் விருது பா. வளர்மதிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தீச்சட்டி ஏந்திய பா. வளர்மதியின் படத்தைப் போட்டு இவருக்கா பெரியார் விருது என மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

இன்று சென்னையில் தமிழக அரசின் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றிய பா. வளர்மதி கூறியதாவது:
பெரியார் விருது எனக்கு அறிவிக்கப்பட்ட உடன் சமூக வலைதளங்களில் சில கேலிச் சித்திரங்களைப் பார்த்தேன். அந்த கேலிச் சித்திரங்களில் தினம்தோறும் கோவிலுக்குப் போகும் வளர்மதிக்கு பெரியார் விருதா? என கேட்கப்பட்டிருந்தது.
இந்த சித்திரங்களை பரப்புகிறவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும். 9 வயதில் எங்கள் கிராமத்தில் தந்தை பெரியார் முன் என் மேடைப் பேச்சு தொடங்கியது. இன்று தந்தை பெரியார் பெயரிலான விருதை நான் பெறுவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை.
தந்தை பெரியார் முன்வைத்தது கடவுள் மறுப்பு மட்டுமல்ல. தந்தை பெரியாரின் 2-வது முக்கிய கொள்கை பெண்ணுரிமை. அதனால்தான் பெண்ணாகிய என்னை பெரியார் விருதுக்கு தேர்வு செய்துள்ளார்கள்.
இவ்வாறு பா. வளர்மதி விளக்கம் அளித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications