என்ன கொடுமை இது... வள்ளுவர் கட்சித் தலைவரா... சிலையை சாக்கு போட்டு மூடிய அப்ரண்டிஸ்கள்!
சேலம்: சேலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் காரணம் காட்டி, திருவள்ளுவர் சிலையையும் தேர்தல் அதிகாரிகள் சாக்கைப் போட்டு மூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் மே மாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
இதனால், அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், கொடி கம்பங்கள், பேனர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகின்றன.

அதன்படி, சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவின் பேரில், அம்மாவட்டத்தில் உள்ள கட்சித் தலைவர்களின் சிலைகளை தேர்தல் அதிகாரிகள் மூடியுள்ளனர்.
ஆனால், ஆர்வமிகுதியாலா அல்லது அறியாமையினாலா எனத் தெரியவில்லை, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவரின் சிலையையும் சில தேர்தல் அதிகாரிகள் சாக்கிட்டு மூடியுள்ளனர்.
உலகமே அறிந்த தமிழ்க் கவிஞர் திருவள்ளுவர் எப்போது எந்தக் கட்சியில் சேர்ந்தார் எனத் தெரியவில்லையே என அப்பாதையில் செல்வோர் கிண்டலடித்து வந்தனர்.
தாமதமாக இது குறித்து தகவல் அறிந்த தேர்தல் அதிகாரி விஜய்பாபு, உடனடியாக திருவள்ளுவரின் சிலையை மூடி இருந்த சாக்கை அகற்ற நடவடிக்கை எடுத்தார். ஊழியர்களின் ஆர்வ மிகுதியால் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications