வண்டலூரில் துள்ளி விளையாடும் 2 புது காட்டுமாடு கன்றுகள் - "மக்கள் தொகை" 21 ஆனது!
வண்டலூர்: வண்டலூர் பூங்காவில் மேலும் ஒரு காட்டுமாடு கன்று ஈன்றது. இதனால் வண்டலூர் பூங்காவில் காட்டு மாடுகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து வண்டலூர் பூங்கா இயக்குனர் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலுள்ள ரேமா என்ற 4 வயது காட்டு மாடு தனது முதல் ஈனுவாக 08.10.2015 அன்று ஒரு ஆண் கன்றையும், காவேரி என்ற 6 வயது மற்றொரு காட்டு மாடு மூன்றாவது ஈனுவாக 15.10.2015 அன்று ஒரு பெண் கன்றையும் ஈன்றது.

தற்போது பிறந்துள்ள கன்றுகளின் தந்தை இப்பூங்காவில் பிறந்து வளர்ந்த விஜய் என்ற 9 வயது ஆண் காட்டு மாடு ஆகும்.
துள்ளிக் குதித்து விளையாடும் கன்றுகள்:
தற்போது புதிதாய் பிறந்துள்ள இக்கன்றுகளுடன் சேர்த்து பூங்காவிலுள்ள காட்டு மாடுகளின் எண்ணிக்கை 12 ஆண் மற்றும் 9 பெண், ஆக மொத்தம் 21 ஆக உயர்ந்துள்ளது. புதிதாய் பிறந்த இக்கன்றுகள் தனது தாய்களுடன் துள்ளிக்குதித்து விளையாடுவது பார்வையாளர்களை மிகவும் கவர்கிறது.
சிறப்பு உணவுகள்:
கன்று ஈன்றுள்ள தாய்க்கு சிறப்பு உணவுகளாக தேங்காய், கடலைப்புண்ணாக்கு, கொண்டை கடலை, வாழைப்பழம், கீரை, சுரைக்காய் போன்றவை கூடுதலாக வழங்கப்படுகிறது.
இண்டியன் பைசன்:
பொதுவாக தமிழில் காட்டெருமை என்று அழைக்கப்பட்டாலும் இவைகள் "காட்டு மாடுகள்" அல்லது "காட்டெருதுகள்" என்பதே சரியாகும். மேலும் இது பைசன் இனமும் அல்லவென்றாலும் இந்தியாவில் "இண்டியன் பைசன்" என்றே அழைக்கப்படுகிறது.
செல்லத் தொந்தரவுகள்:
275 நாட்கள் அல்லது 9 மாத சினைக்காலத்தை உடைய காட்டு மாடுகள் ஒன்று அல்லது அரிதாக இரண்டு கன்றுகளை ஈனும். இவை வருடம் முழுவதும் இனப்பெருக்கம் செய்கின்றன. தாயின் வயிற்றிலிருந்து பிறந்து விழுந்தவுடன் கன்றுகள் பத்தே நிமிடங்களில் நடக்க ஆரம்பிக்கும். பின்னர் இருபதே நிமிடங்களில் தாயின் குறுக்கே அங்குமிங்கும் துள்ளிக்குதித்து செல்லமான தொந்தரவுகளைக் கொடுக்கும். தாய் தனது நாக்கால் பிறந்த கன்றுகளை நன்கு நக்கி இரத்த வாடையை நீக்கும். இதனால் இரைக்கொல்லிகள் மூலம் கன்றுகளுக்கு வரும் உடனடி ஆபத்து தடுக்கப்படுகிறது.
தங்க நிறத்தில் ஜொலிக்கும் கன்றுகள்:
புதிதாகப் பிறக்கும் கன்றுகள் ஏறத்தாழ தங்க நிறத்துடன் இருக்கும். மிக விரைவில் வயதிற்கேற்றவாறு இளம்பழுப்பு நிறத்தைப் பெற்று அதிலிருந்து வரக்காப்பி வண்ணத்தை அடையும் அல்லது சிவப்பேறிய கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications