பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பிரசாரத்தில் மோதல்: வந்தவாசியில் பதற்றம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பா.ம.க வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பிரசாரத்தின்போது இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர் இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர், பதற்றம் நிலவுகிறது.
ஆரணி தொகுதியின் பா.ம.க வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி நேற்று மாலை வந்தவாசி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள பெரியகாலனி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், இங்கே பிரசாரம் செய்யக் கூடாது என்றும், கொடியை கட்டக் கூடாது என்றும் கூறினார்களாம்.

இதனை, பா.ம.க.வினர் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது. அப்போது, ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் எதிரொலியாக வந்தவாசி தேரடியில் பெரியகாலனி பகுதியை சேர்ந்த ஆட்டோவை பா.ம.க.வினர் அடித்து உடைத்தனர். மேலும், வந்தவாசி அரசு மருத்துவமனை அருகே சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த பெரியகாலனி பகுதியை சேர்ந்த ஜெகதீசன் என்பவரையும் பா.ம.க.வினர் பிளேடால் தாக்கியுள்ளனர். இதில் ஜெகதீசன் பலத்த காயம் அடைந்தார்.
இந்த தாக்குதலில் காயம் அடைந்த 3 பேரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் தொடர்பாக பாமகவினர் 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே, கற்கள் வீசி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி ஏ.கே.மூர்த்தி வந்தவாசி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டடார். இதைத் தொடர்ந்து பெரியகாலனியை சேர்ந்த இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
வன்முறை எதிரொலியாக தகவல் அறிந்து வடக்கு மண்டல ஐஜி தமிழ்சந்திரன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications