வந்தே பாரத் ரயிலில் திடீரென கிளம்பிய புகை.. அலறி அடித்த பயணிகள்! நடுவழியில் 30 நிமிடங்கள் நிறுத்தம்!
திண்டுக்கல்: வந்தே பாரத் ரயிலில் இன்று திடீரென புகை வந்ததால் பரபரப்பு எற்பட்டது. திண்டுக்கல் அருகே வந்தே பாரத் ரயிலின் ஏ.சியில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் நடுவழியில் வந்தே பாரத் ரயில் நிறுத்தப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுக்கு பொதுமக்கள் இடையே, நல்ல வரவேற்பு உள்ளது. திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இன்று காலை வழக்கம் போல் வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இந்த ரயில் திண்டுக்கல் அருகே வந்த போது வேல்வார்கோட்டை அருகே திடீரென ரயிலின் ஒரு பெட்டியில் இருந்து கரும் புகை வெளியேறியது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். மேலும், ஆபத்தை உணர்ந்த பயணிகள் ரயிலின் அபாய சங்கிலி பிடித்து இழுத்தனர்.
ஏ.சி.யில் இருந்து புகை கிளம்பியதால் வடமதுரை அருகே வேல்வார்கோட்டை என்ற இடத்தில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து வந்த ரயில் ஓட்டுநர் மற்றும் ரயில்வே கார்டு ஆகியோர் சம்பந்தப்பட்ட பெட்டியில் சோதனை செய்தனர். இதில், ஏசியில் ஏற்பட்ட கோளாறால் கரும் புகை வெளியேறியது தெரியவந்தது. இதையடுத்து, ஏசியில் ஏற்பட்ட கோளாறை தொழில்நுட்ப நிபுணர்கள் பழுதை சரி செய்தனர்.
அரை மணி நேரம் ரயில் நிறுத்தப்பட்டு, அதன் பிறகு வந்தே பாரத் ரயில் கிளம்பியது. வந்தே பாரத் ரயில் நடுவழியில் நின்றதால் அந்த வழியாக செல்லக்கூடிய மற்ற ரயில்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த ரயில்களும் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.
உடனடியாக, புகை வந்த பகுதியில் இருந்த பயணிகள் மாற்றுப் பெட்டிக்கு மாற்றப்பட்டுள்ளனர். முழுவதும் ஏசி வசதி கொண்ட ரயில் என்பதால் கண்ணாடிகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் இருப்பதால் பயணிகள் பத்திரமாக மாற்ற கம்பார்ட்மென்ட்க்கு மாற்றப்பட்டனர்.
ஏ.சியில் பழுது நீக்கப்பட்ட பிறகு பாதுகாப்பு கருதி பின்னர் ரயிலின் வேகத்தை அதன் ஒட்டுநர்கள் குறைத்து திருச்சிக்கு கொண்டு சென்றனர். நாள்இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலில் திடீரென இன்று கரும் புகை வெளியேறிய சம்பவம் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications