வாரிசு சான்றிதழ் கொடுக்க ரூ.7 ஆயிரம் லஞ்சம்- ஈரோட்டில் வி.ஏ.ஓ கைது
ஈரோடு: ஈரோட்டில் வாரிசு சான்று வழங்க ரூபாய் 7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், பவானியை வட்டம், பருவாச்சி கிராமம், சத்யா நகரைச் சேர்ந்தவர் கருப்பகவுண்டர். இவர் திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்துவந்தார்.
தனது தந்தை இறந்ததால் வாரிசு சான்று கேட்டு பருவாச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இங்கு, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், ஆனங்கூர் சாலையைச் சேர்ந்த தங்கவேலு மகன் விஜயராஜ் என்பவர் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தார்.

வாரிசு சான்று வழங்கிட முதல் கட்டமாக ரூபாய் 7 ஆயிரமும், சான்றிதழைத் தரும்போது ரூபாய் 9 ஆயிரமும் என ரூபாய் 16 ஆயிரம் லஞ்சமாகத் தரவேண்டும் என கருப்ப கவுண்டரிடம் கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜ் கேட்டுள்ளார்.
பணம் கொடுக்க விருப்பமில்லாத கருப்பகவுண்டர் இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் தெரிவித்தார். இதையடுத்து, அவர்கள் கொடுத்தனுப்பிய இரசாயனப்பொடி தடவப்பட்ட பணத்தைக் கருப்பகவுண்டர், அலுவலகத்தில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜிடம் கொடுத்தார்.
விஜயராஜ் பணத்தை பெற்றுக்கொண்டது தெரிந்ததும், அங்கே மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக்கண்காணிப்பாளர் புஷ்பராஜ் மற்றும் ஆய்வாளர் இராஜேஷ் உள்ளிட்டோர் விஜயராஜை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications