விஏஓ தேர்வு, குரூப் 1, 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு... டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கோவை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய விஏஓ, குரூப் 1, குரூப் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று ஆணையத்தின் தலைவர் அருள்மொழி கூறியுள்ளார்.
இதுகுறித்து கோவையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு, தகுதி மற்றும் திறமை அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே தேர்வு எழுதுபவர்கள், தங்களது தகுதி, திறமை மேல் நம்பிக்கை வைத்து நன்றாக படித்து எழுத வேண்டும்.

நான் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கடந்த அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை 13 வகையான தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வு முடிவுகள், டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணி தாமதம் ஆனதால் முடிவுகளை வெளியிட முடியாமல் போனது. மிக விரைவில் குரூப்-1, குரூப்-2, வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
2016-17-ம் ஆண்டில் நடைபெற உள்ள அரசு பணியாளர் தேர்வுகள் குறித்த அட்டவணை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையக்குழுவின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதுபவர்கள் முன்கூட்டியே தயாராவதற்காக இந்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications