'எக்ஸ்ட்ரா டைம்' பேசிட்டார் ராமதாஸ்.. 5 'கணக்குப் பிள்ளைகள்' புகார்!
அரூர்: தர்மபுரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட அரூர் சட்டசபைத் தொகுதிப் பகுதிகளில் பிரசாரம் செய்தபோது ஒதுக்கப்பட்ட நேரத்தை விட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதாக 5 கிராம நிர்வாக அதிகாரிகள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர்.
தர்மபுரியில் போட்டியிடும் மகன் அன்புமணி ராமதாஸுக்கு ஆதரவாக தீவிரப் பிரசாரம் செய்து வருகிறார் ராமதாஸ். கம்பைநல்லூர் பகுதியில் உள்ள இருமத்தூர், வகுரப்பம்பட்டி, சின்னமுருக்கம்பட்டி, கருவேலம்பட்டி, ஆல்ரப்பட்டி மற்றும் கொன்றம்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்தார்.

அவருக்கு, பிரச்சாரம் செய்ய அப்பகுதியில் மாலை, 4.30 மணி முதல், 6 மணி வரை, தேர்தல் அதிகாரிகள் நேரத்தை ஒதுக்கீடு செய்தனர். ஆனால், அவர் நேரத்தை மீறி மாலை, 5.45 மணிக்கு பிரச்சாரத்தை துவக்கி, ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பிரச்சாரம் செய்ததாக, இருமத்தூர் வி.ஏ.ஓ., கனகராஜ், வகுரப்பம்பட்டி, சின்னமுருக்கம்பட்டி, கருவேலம்பட்டி உள்ளிட்ட, ஐந்து வி.ஏ.ஓ.,க்கள் கம்பைநல்லூர் போலீஸில் புகார் செய்தனர்.
இன்னும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications