வர்தா புயல்: காற்றின் வேகம் தாங்காமல் தடுமாறி விழுந்து 36 பேர் காயம்
சென்னையில் பலத்த புயல் காற்று வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைந்துள்ளனர். புயல் காற்று காரணமாக வாகன ஓட்டிகள் 36 பேர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர்.
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் தற்போது சென்னையில் இருந்து 50 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. பிற்பகலில் பழவேற்காடு கும்மிடிப்பூண்டி இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இரவு முதல் காலை வரை சென்னையில் 7.5 செமீ மழை பதிவாகியுள்ளது.

முறிந்த விழுந்த மரம்
காற்று பலமாக வீசுவதால் பெரும்பாலான இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. காற்றின் வேகம் தாங்காமல் மரம் முறிந்து வீட்டில் மேல் விழுகிறது. அந்த வீட்டில் இருந்தவர்களின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை.
அரும்பாக்கம் அருகில் 😷😷😷#வர்தாபுயல் pic.twitter.com/2gueyRF492
— ❤கௌ❤ (@imgowraina) December 12, 2016
36 பேர் காயம்
புயல் காரணமாக பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் பலர் வீட்டை விட்டு வெளியேறி இருசக்கர வாகனங்களில் பயணித்தனர். காற்றின் வேகம் தாங்காமல் பலரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதுவரை 36 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications