அ.தி.மு.க. அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.. ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
அதிமுக அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னை: அ.தி.மு.க. அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அ.தி.மு.க. ஆட்சி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. தற்போது 2 ஆக பிரிந்துள்ள நிலையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

ஜெயலலிதா தலைமையில் நடந்த ஆட்சி வேறு. இப்போது எடப்பாடி தலைமையிலான ஆட்சி வேறு. இந்த அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. அ.தி.மு.க.வின் 2 அணிகளும் இணைய வேண்டும் என்பது த.மா.கா.வின் விருப்பம்.
இந்த விஷயத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை தெரிவித்து இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியும் அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். டெல்லி சென்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்துக்கு தேவையான நிதிகளையும், திட்டங்களையும் பெற்று வரவேண்டும். விவசாயிகள் பிரச்சனையை மத்திய- மாநில அரசுகள் நிறைவேற்றி வைக்க வேண்டும் என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications