நெடுமாறன், சிவாஜி கதிதான்.. வாசனுக்கு முன்னாள் ஆதரவாளர் கோபண்ணா 'வார்னிங்'!
சென்னை: தமிழக காங்கிரஸை உடைத்து தனிக் கட்சி உடைத்தால் ஜி.கே.வாசனால் நீண்டகாலம் தாக்குப் பிடிக்க முடியாது என்று அவரது முன்னாள் ஆதரவாளரான கோபண்ணா எச்சரித்துள்ளார்.
காங்கிரஸ் மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.வாசனின் ஆதரவாளர் ஞானதேசிகன் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸை விட்டு வெளியேறி மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்க வாசன் திட்டமிட்டுள்ளார்.

கோபண்ணா
ஆனால் ஜி.கே.வாசனுடன் காங்கிரஸை விட்டு வெளியேற பல மூத்த தலைவர்கள் தயாராக இல்லை என்றே கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜி.கே.வாசனின் முன்னாள் ஆதரவாளரான கோபண்ணா கூறியுள்ளதாவது:

மக்கள் மன்னிக்கமாட்டார்கள்
காங்கிரஸை விட்டு வெளியேற வாசன் முடிவு செய்தால் அது மிகப் பெரிய தவறாகும். காங்கிரஸ் கட்சியில் 11 ஆண்டுகாலம் இருந்த ஜி.கே.வாசன் 10 ஆண்டுகாலம் அனைத்து சுகங்களையும் அனுபவித்துவிட்டு இப்போது வெளியேறினால் மக்கள் அவரை மனிக்கமாட்டார்கள்.

நியாயப்படுத்தவே முடியாது
காங்கிரஸ் மேலிடத்துக்கு எதிரான வாசனின் கோபத்துக்கு எந்த ஒரு நியாயமும் கற்பிக்க முடியாது. 12 ஆண்டுகாலம் ராஜ்யசபா எம்.பி.யாகவும் 10 ஆண்டுகாலம் கேபினட் அமைச்சராகவும் வலம் வந்தீர்கள். மூத்த காங்கிரஸ் தலைவர்களான ஆனந்த் சர்மா, ஜெயந்தி நடராஜன், நாராயணசாமி ஆகியோர் கூட இணை அமைச்சர்களாகத்தான் இருந்தனர்.

தர்மசங்கடத்தை ஏற்படுத்திய வாசன்
ராகுல் காந்திக்கும் வாசனுக்குமான உறவு சரியில்லை. அதனால் மட்டுமே அவர் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது போல கோரிக்கைகளை வாசன் முன்வைத்துக் கொண்டிருந்தது என்பது ஒரு தேசியக் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.

இவங்க கதி என்னன்னு தெரியும்..
ஒரு தேசியக் கட்சி என்பது தேர்தல்களில் தோல்வியை சந்திக்கும்; மீண்டும் எழும். காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி தனிக் கட்சி நடத்திய பழ. நெடுமாறன், சிவாஜி கண்சேன் ஏன் மூப்பனார், சிதம்பரம் போன்றவர்கள் கூட நீண்டகாலம் தாக்குப் பிடிக்க முடியாமல் போய் மீண்டும் காங்கிரஸிலேயே ஐக்கியமாகினர்.

மூப்பனாராலேயே முடியலையே..
மேலும் மூப்பனார், காங்கிரஸை விட்டு வெளியேறிய போது சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், தனுஷ்கோடி ஆதித்தன், அருணாசலம் என பல மூத்த தலைவர்கள் வெளியேறினர். ஆனாலும் அவராலேயே தாக்குப் பிடிக்க முடியவில்லையே...
இவ்வாறு கோபண்ணா கூறியுள்ளார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications