மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி... ஜல்லிக்கட்டுக்கு புது சட்டம் - ஜி.கே.வாசன்
தமிழக மீனவர் பிரச்சினையில் வெளியுறவு துறை உடனடியாக தலையிட்டு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்த நாடாளுமன்றத்தில் கொள்கை ரீதியிலான புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். கொள்கை ரீதியிலான சட்டம் கொண்டு வந்தால் வருகின்ற பொங்கல் பண்டிகையில் ஜல்லிக் கட்டு நடைபெறும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 1000 பேர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா தி.நகர் பத்மாவதி திருமண மண்டபத்தில் நடந்தது. த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இணைந்தனர்.
அதே மகிழ்ச்சியோடு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், காரைக்கால் பகுதியில் 2 மீனவர்கள் வங்க கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தபோது இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதல் கண்டனத்துக்குரியது. வெளியுறவு துறை இதில் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.

உப்பு வதந்தி
திருவள்ளூர், சேலம், நாமக்கல் போன்ற நகரங்களில் உப்பு தட்டுப்பாடு வதந்தி காரணமாக கிலோ ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டு மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள் ளார்கள். இதில் அரசு உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நோட்டு தட்டுப்பாடு
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு பொது மக்கள் பெரும் இன்ன லுக்கு ஆளாகி உள்ளார்கள். விரல்களில் அடையாள மை வைத்து பொது மக்களை அவமானப்படுத்துகிறார்கள். கள்ள பணம் தடுப்பு முயற்சியால் சாதாரண மக்கள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கறுப்பு பணம்
சுவீஸ் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள கருப்பு பணம் குறித்தும், அவர்கள் யார் யார் என்ற அடையாளத்தையும் வெளிக் கொண்டு வர வேண்டும். சில்லரை தட்டுப்பாட்டால் சிறு வணிகர்கள் பாதிக்கப் பட்டுள்ளார்கள். பொருளா தார சீர் திருத்தம் தேவை தான். மத்திய அரசின் தவறான திட்டமிடல், முன் எச்சரிக்கை இல்லாததால் கருப்பு பணம் ஒழிப்பு, கள்ள பணத்தை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு நடத்த நாடாளுமன்றத்தில் கொள்கை ரீதியிலான புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும். கொள்கை ரீதியிலான சட்டம் கொண்டு வந்தால் வருகின்ற பொங்கல் பண்டிகையில் ஜல்லிக் கட்டு நடைபெறும். இதற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications