லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அணியில் தேமுதிக இணைந்தால் மகிழ்ச்சி- ஜி.கே. வாசன்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேசிய அளவில் 2-வது அணி, 3-வது அணி குறித்து காங்கிரஸுக்கு கவலை இல்லை.
வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கும். இந்த அணியில் தேமுதிக இணைந்தால் மகிழ்ச்சி அடைவோம்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரபலமான தலைவர் ராகுல் காந்தி. அவர் நகரங்களில் மட்டும் பிரசாரம் செய்வதில்லை. தொலைதூர கிராமங்களுக்கும் சென்று மக்களைச் சந்திக்கிறார்.எனவே, அவருக்காக நாங்கள் விளம்பரம் செய்யத்தேவையில்லை.
சோனியா, ராகுல் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, நாங்கள் பிரதமர் வேட்பாளர் குறித்து கவலைப்படவில்லை.
ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதா? அல்லது மற்றவர்களுக்கு ஆதரவளிப்பதா? என்பது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications